PBKS-RCB: மாஸ்டர் பினிஷர்... சூப்பர்மேனாக மாறிய தினேஷ் கார்த்திக்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியிருந்தாலும், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சூப்பர்மேனாக மாறிய தருணத்தை ரசிகர்களை மகிழ்ச்சியாக பார்த்து ரசித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, இங்கிலாந்துக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, தினேஷ் கார்த்திக் தனது கைகளில் குறிப்புகளுடன், கேப்டன் விராட் கோலியை நாட்டிங்ஹாம் புல்வேளியில் அமர வைத்து நேர்காணல் செய்தார். கார்த்திக் கோலியிடம் பல கடினமான கேள்விகளை முன்வைத்தார். ஸ்கை ஸ்போர்ட்ஸின் சிறப்பு வர்ணனையாளராக களமிறங்கிய தினேஷின் கேஷூவலான கேள்விகள், இங்கிலிஷ் மக்களின் இதயங்களை வென்றது. அவரை, அந்த சுற்றுப்பயணத்தின் கண்டுபிடிப்பு என நெட்டிஸ்சன்கள் கூறினர். மாற்று பாதையில் முதல் முயற்சியிலே சாதித்த தினேஷ் கார்த்திக்கை, இனி விக்கெட் கீப்பராக ஸ்டம்புகளுக்குப் பின்னால் காணப்பட முடியாது என பலரும் நினைத்தார்கள். ஆனால், அதனை தவறு என புரிய வைத்துளள்ளார்.
Advertisment
நேற்று பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி 3 ஓவர்களில் அதிரடியை தொடங்கிய தினேஷ், 14 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். கார்த்திக் சிக்ஸ், பவுண்டர் அடிக்கும் ஒவ்வொரு முறையும், விராட் கோலி புன்னகையுடன் அவரை பாராட்டினார். இறுதியில் போட்டி முடிந்து, மைதானத்தை விட்டு செல்கையில் தினேஷ் தோள் மீது கை போட்டு நடந்து சென்றார். ஆர்சிபி அணிக்கு நல்ல பினிஷராக தினேஷ் இருப்பார் என ரசிகர்கள் பதிவிட தொடங்கினர். கேள்விகளை கேட்டுக்கொண்ட தினேஷ், தற்போது விடைகளை அளிக்க தொடங்கியுள்ளார்.
ஸ்வீப்/ஸ்கூப் ஷார்ட்டுக்கு பெயர்ப்போன தென்னாப்பிரிக்கா வீரர் என்றால், உங்களுக்கு நினைவுக்கு முதலில் வருபவர் ஏபி டி வில்லியர்ஸ் தான். பலரும் ஏபி போல் அடிக்க முயற்சிப்பார்கள. ஆனால், அவரது பள்ளி தோழனாகவும், வாழ்கைகயில் சகோதரனாகவும், முன்னாள் சக வீரருமான ஃபாஃப் டு பிளெசிஸூம் இதற்கு சளித்தவர் இல்லை. இவரும் ஸ்கூப் ஷார்ட்டுக்கு பெயர்ப்போனவர் தான். டெஸ்டில் ஸ்வீப் ஷாட்டும், டி20களில் ஸ்கூப் ஷாட்டும் அடிக்கக்கூடியவர்.
சில நேரங்களில், அவர் அத்தகைய ஷாட்களின் போது, கேப்பை மற்ற ஸ்டம்ப்களை அடித்து விக்கெட் ஆன தருணங்களும் உள்ளது. ஆனால் அவரது இத்தகைய ஷாட்கள் பெரும்பாலான நேரங்களில் கவனிக்கப்படாமல் இருந்தது. தற்போது,ஏபியின் இடத்தை அவர் நிரப்பி வருகிறார். மும்பையின் ஈரப்பதத்தை அவர் உடலில் ஏற்பட்ட வியர்வையை, ஒவ்வொரு முறையும் பந்தை அடிக்கும் போது துடைத்து எடுத்தார். ஒருவேளை, AB இல்லாததால், அவரது சகோதரரை முழுமையாக பாராட்ட வழிவகுக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil