இந்திய விக்கெட் கீப்பர்களின் சாம்ராஜ்ய கதையை 2005க்குப் பிறகு, இந்த நொடி வரை தன் வசம் வைத்திருப்பவர் தோனி மட்டுமே. அவரது ஆளுமைக்கு கீழ் தான் மற்ற விக்கெட் கீப்பர்கள் வருகிறார்களே தவிர, அவரை ஓவர்கம் செய்யும் அளவுக்கு இதுவரை எவரும் சிக்கவில்லை (?).
ஆனால், தோனியின் இந்த புயலில் சிக்கிய தரம் வாய்ந்த ஒரே விக்கெட் கீப்பர் என்றால், அது தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் தான். இவரது ஸ்டெம்பிங், தோனியின் சர்வதேச வருகைக்கு முன்பே வைரல் ஆன வரலாறெல்லாம் இன்றைய கிரிக்கெட் கிட்ஸுக்கு அதிகம் தெரியாத ஒன்று.
தினேஷ் கார்த்திக்கின் உடல் அசைவுகள் அவ்வளவு வேகமாக களத்தில் இயங்குவதை நம்மால் பார்த்திருக்க முடியும். அவரது நடையே ஒரு மாதிரியான கோணலான வேக ஸ்டைலில் இருக்கும். அவ்வளவு வேகமாக மூவ்மெண்ட்ஸ் கொண்ட தினேஷ், தோனியின் வருகையால் தான் இந்திய அணியில் கோலோச்ச முடியாமல் வெளியே உட்கார்ந்திருந்தார்.
தற்போது, 34 வயதாகிவிட்டதாலும், இளம் வீரர்களின் வருகையாலும் மீண்டும் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
எது எப்படியோ, இப்போதும் தினேஷ் கார்த்திக்கின் அந்த அபார மூவ்மென்ட்ஸ் எந்த ரேஞ்சுக்கு இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்.
4, 2019
இன்று ராஞ்சியில் நடைபெற்ற தியோடர் டிராபி தொடர் போட்டியில், இந்தியா c அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், இந்தியா b அணியின் கேப்டன் பார்த்திவ் படேல் அடித்த பந்தை இடது கையால் டைவ் அடித்து பிடித்த கேட்ச் தான் இப்போது வைரல்.