Advertisment

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு: டி.கே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Dinesh Karthik officially announces retirement from all forms of cricket Tamil News

தினேஷ் கார்த்திக் 26 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 7 அரைசதங்களுடன் 1025 ரன்களையும், 94 ஒருநாள் போட்டிகளில் 9 அரைசதங்களுடன் 1752 ரன்களையும், 60 டி20 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 686 ரன்களையும் எடுத்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Dinesh Karthik | Indian Cricket Team: அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் கடந்த செப்டம்பர் 2004 இல் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 19 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமானார். 

Advertisment

தினேஷ் கார்த்திக் 26 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 7 அரைசதங்களுடன் 1025 ரன்களையும், 94 ஒருநாள் போட்டிகளில் 9 அரைசதங்களுடன் 1752 ரன்களையும், 60 டி20 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 686 ரன்களையும் எடுத்துள்ளார். மூன்று வடிவங்களிலும் மொத்தமாக 180 ஆட்டங்களில் ஆடியுள்ள அவர், ஒரு டெஸ்ட் சதம் மற்றும் 17 அரை சதங்களுடன் 3463 ரன்கள் எடுத்துள்ளார். 

மேலும், அவர் 172 ஆட்டமிழப்புகளை செய்துள்ளார். அவற்றில் சில அவுட்ஃபீல்டில் வந்துள்ளன. இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்கமால் தவித்து வந்த அவர் கடைசியாக 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். 2022 ஐ.பி.எல் தொடரில் 183 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் 330 ரன்கள் எடுத்து மிரட்டி இருந்தார். இதனையடுத்து, அந்த ஆண்டு இறுதியில் நடந்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார். ஆனால், அதுவே இந்திய அணிக்காக அவரது கடைசி ஆட்டமாக அமைந்து போனது. 

தினேஷ் கார்த்திக், 6 ஐ.பி.எல் அணிகளில் விளையாடியுள்ளார். கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், குஜராத், மும்பை ஆகிய அணிகளுக்காக மொத்தமாக 257 போட்டிகளில் விளையாடி 4,842 ரன்களை எடுத்துள்ளார். 466 பவுண்டரிகள், 161 சிக்ஸர்களுடன் 22 அரைசதங்களை அவர் விளாசியுள்ளர். அவர் 145 கேட்சுகள் மற்றும் 37 ஸ்டம்பிங்குகளை எடுத்ததுடன் 17 சீசன்களில் 5000 ரன்களை நெருங்கி ஐபிஎல் வெற்றியாளராக முடித்தார்.

அவர் தனது கடைசி ஆட்டத்தை 2024 ஐ.பி.எல் தொடரில் மே 22 அன்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ஆடினார். இப்போட்டியில், அவர் களமாடிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்றது. எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு  அணி தோல்வியடைந்து பிளே ஆஃப்பில் இருந்து வெளியோறியதை தொடர்ந்து, விக்கெட் கீப்பர் வீரரான தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அவருக்கு சக பெங்களூரு அணி வீரர்களும், ராஜஸ்தான் அணியினரும்  மரியாதை செய்தனர். மேலும், விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் அவரை கட்டியணைத்து பிரியாவிடை அளித்தார்.

தினேஷ் கார்த்திக் ஓய்வு அறிவிப்பு 

இந்த நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “கடந்த சில நாட்களாக நான் பெற்ற பாசம், ஆதரவு மற்றும் அன்பினால் நான் மூழ்கிவிட்டேன். இந்த உணர்வை ஏற்படுத்திய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. சில காலமாக நிறைய யோசித்துவிட்டு, பிரதிநிதி கிரிக்கெட்டில் இருந்து மாற முடிவு செய்துள்ளேன். நான் ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, வரவிருக்கும் புதிய சவால்களுக்காக நான் விளையாடும் நாட்களை எனக்குப் பின்னால் வைக்கிறேன். 

இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நம் நாட்டில் விளையாட்டாக விளையாடும் மில்லியன் கணக்கானவர்களில், தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டசாலியாக நான் கருதுகிறேன். மேலும் பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பது இன்னும் அதிர்ஷ்டசாலி யாக உணர்கிறேன். 

இத்தனை வருடங்களாக என் பெற்றோர் பலம் மற்றும் ஆதரவின் தூண்களாக இருந்துள்ளனர், அவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் நான் என்னவாக இருக்க முடியாது. என்னுடன் எனது பயணத்தை நடத்துவதற்காக தனது வாழ்க்கையை அடிக்கடி நிறுத்திவைத்த ஒரு தொழில்முறை விளையாட்டு வீராங்கனையான தீபிகாவுக்கும் நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். நிச்சயமாக, எங்கள் சிறந்த விளையாட்டின் அனைத்து ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு, ஒரு பெரிய நன்றி! உங்கள் ஆதரவும் நல்வாழ்த்துக்களும் இல்லாமல் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஒரே மாதிரியாக இருக்க முடியாது." என்று அவர் பதிவிட்டுள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Dinesh Karthik Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment