Dinesh Karthik vs Rishabh Pant | T20 World Cup 2024: ஐ.பி.எல் 2024 தொடர் முடிந்தவுடன், இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும். இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) நடப்பு ஐ.பி.எல் சீசனில் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
இந்தியாவின் முக்கிய தேர்வாக விக்கெட் கீப்பர் ரோல் இருக்கும். இதற்கு தற்போது, தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு விருப்பங்கள் உள்ளன. இவர்களில் யாரை தேர்வாளர்கள் தேர்வு செய்வார்கள் என்பதைப் பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும்.
/indian-express-tamil/media/post_attachments/c787de0a-8ed.jpg)
ரிஷப் பண்ட் கோரமான கார் விபத்தில் சிக்கிய 15 மாதங்களுக்குப் பிறகு தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியிருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் (டி.சி) கேப்டனாக அவர் திரும்பியுள்ளது நிச்சயமாக அவரது அணிக்கு உதவியிருக்கிறது. இதுவரை, அவர் 6 போட்டிகளில் ஆடி 32.33 சராசரியிலும் 157.72 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 194 ரன்கள் எடுத்துள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/47d7c2e3-16c.jpg)
மறுபுறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியில் ஆடி வரும் தினேஷ் கார்த்திக், அந்த அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவர் மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் 23 பந்துகளில் 53 ரன்களை எடுத்து அசத்தினார். அப்போது, மும்பையின் முன்னாள் கேப்டனும் இந்திய அணி கேப்டனுமான ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் டி20 உலகக் கோப்பைத் தேர்வை மனதில் வைத்தே இப்படி அதிரடியாக விளையாடி வருகிறார் என்று கிண்டலாக கூறினார்.
இருப்பினும், தினேஷ் கார்த்திக் பெங்களுருவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்திலும் அற்புதமாக செயல்பட்டார். அவரது அணி 287 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நிலையில், தனது அணிக்காக சிறப்பாக ஆடினார். 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்ததோடு, இந்த சீசனின் மிக நீண்ட சிக்ஸரை அடித்த வீரர் என்கிற சாதனையையும் படைத்தார்.
ரசிகர்கள் ரியாக்சன்
தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான பேட்டிங்கை, "புத்திசாலித்தனம்", "சிறந்தது" மற்றும் "விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்!" என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில், வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் நுழைவது குறித்தும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
ஐதராபாத் அணிக்கு எதிரான இன்னிங்ஸை உலகக் கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்கின் "வைல்ட் என்ட்ரி" என்று ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். “தினேஷ் கார்த்திக் உலகக் கோப்பைக்கு விமானத்தைப் பிடிக்க முயற்சிக்கிறார்! சிறப்பான வீரர்! அவருக்கு என் ஆதரவு" என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
"2024 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கான ஃபினிஷர் தினேஷ் கார்த்திக்" என்றும், "டி20 உலகக் கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
“இன்று இரவு சின்னசாமி மைதானத்தில் ஓய்வில்லாத பையனாக டி.கே தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் தனது சிறந்த கிரிக்கெட்டை ஆடுவது கண்களுக்கு விருந்தாக இருந்தது. லெஜண்ட் இப்போது பிறந்துள்ளார். நீண்ட நீண்ட மைல் செல்ல வேண்டும். ஓஹோ கார்த்திக்!!!!" என்று இன்னொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“