Advertisment

ரஞ்சி கோப்பை தோல்வி: 'இதெல்லாம் ரொம்ப தப்புங்க' - பயிற்சியாளர் மீது டி.கே கடும் சாடல்

மும்பை அணியுடனான ரஞ்சி கோப்பை அரையிறுதி தோல்விக்கு கேப்டன் சாய் கிஷோரே காரணம் என்று பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னியின் கருத்துக்கு மூத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கடுமையாக சாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Dinesh Karthik slams Tamil Nadu coach Kulkarni  blaming captain Sai Kishore Ranji Trophy semifinal defeat Tamil News

போட்டியில டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது தான் தோல்வியை கொடுத்ததாக தமிழக அணியின் பயிற்சியாளர் குலத்தன் குல்கரனி பரபரப்பான குற்றம் சாட்டை வைத்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamilnadu Cricket Team | Dinesh Karthik | Ranji Trophy: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடந்த 2வது அரையிறுதிப் போட்டியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணியை இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை 48-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Advertisment

இந்நிலையில், மும்பை அணியுடனான ரஞ்சி கோப்பை அரையிறுதி தோல்விக்கு கேப்டன் சாய் கிஷோரே காரணம் என்று பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னியின் கருத்துக்கு மூத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கடுமையாக சாடியுள்ளார்.

படு தோல்வி 

இந்த தொடருக்கான தமிழக அணியை இளம் வீரர் சாய் கிஷோர் வழிநடத்திய நிலையில், அவரது தலைமையிலான அணி லீக் மற்றும் காலிறுதியில் அபார வெற்றி பெற்று 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. அதனால், இம்முறை தமிழ்நாடு அணி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என பலரும் எதிர்பார்த்தனர். 

ஆனால், அரையிறுதி ஆட்டத்தில் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட தமிழக அணி மும்பையிடம் தோல்வி கண்டு வெளியேறியது. முதல் இன்னிங்சில் 146 ரன்கள் எடுத்த தமிழ்நாடு அணி, ஒரு கட்டத்தில் 106 ரன்களுக்கு 7 விக்கெட்டை கைப்பற்றி மிரட்டியது. சாய் கிஷோரின் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆனால், 8வது விக்கெட்டுக்கு வந்த ஷர்துல் தாக்கூர் தமிழக அணியினரின் இறுதிப்போட்டி கனவை சுக்குநூறாக உடைத்தார். 

சதம் அடித்து மிரட்டிய எடுத்த 'லார்டு' தாக்கூர் 109 ரன்கள் எடுத்து 9வது விக்கெட்டுக்கு மும்பை அணி 290 ரன்கள் குவிக்க உதவினார். இதன்பிறகு வந்த தனுஷ் கோட்யான் 89 ரன்கள் எடுக்கவே முதல் இன்னிங்ஸ் முடிவில் மும்பை 378 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 2வது இன்னிங்சில் ஆடிய தமிழ்நாடு வீரர்கள் மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி எடுத்தனர். அதனால் 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

சாய் கிஷோரை குற்றம் சாட்டிய பயிற்சியாளர் 

இந்நிலையில், இந்தப் போட்டியில டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது தான் தோல்வியை கொடுத்ததாக தமிழக அணியின் பயிற்சியாளர் குலத்தன் குல்கரனி பரபரப்பான குற்றம் சாட்டை வைத்தார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குலத்தன் குல்கரனி, "பிட்ச்சை நான் பார்த்ததும் எங்களுக்கு என்ன கிடைக்கும் என்பது எனக்கு நன்றாக தெரிந்தது. 

காலிறுதியில் அவர்கள் வித்தியாசமான பிட்ச்சில் விளையாடினார்கள். அதைப் பார்த்த நான் இந்த அரையிறுதி பிட்ச் வேகத்துக்கு சாதகமாக மிகவும் கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் போட்டியை நாங்கள் வெல்வதற்கு சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும்.

எப்போதும் நான் நேரடியாக பேசி விடுவேன். இந்த போட்டியின் முதல் நாள் காலை 9 மணிக்கே நாங்கள் தோற்று விட்டோம். டாஸ் வென்ற எங்களுக்கு அனைத்தும் கிடைத்தது. நான் மும்பையை சேர்ந்த நபர் என்பதால் இங்குள்ள சூழ்நிலைகள் எனக்கு நன்றாக தெரியும்.

இங்கே நாங்கள் முதலில் பந்து வீசியிருக்க வேண்டும். ஆனால் எங்களுடைய கேப்டன் வேறு உள்ளுணர்வைக் கொண்டிருந்தார். அவர் தான் எங்கள் அணியின் பாஸ். பிட்ச், எதிரணியின் மனநிலை என்ன என்பதை பற்றிய உள்ளீடுகளை என்னால் வழங்க முடியும். இப்போட்டியில் முதலில் பந்து வீசுவதற்காக நாங்கள் மனதளவில் தயாராக இருந்தோம்.

ஆனால் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது எங்களுடைய பேட்ஸ்மேன்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் காலிறுதியில் 3-வது விளையாடிய அவர் 65 ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார். அந்த வகையில் இப்போட்டியில் அவர் வித்தியாசமான உள்ளுணர்வை கொண்டு டாஸ் முடிவை எடுத்தார். எனவே, கேப்டனை நான் குற்றம் சொல்ல மாட்டேன். கடந்த 7 - 8 வருடங்களில் வேறு வீரர்கள் தலைமையில் அரையிறுதி வராத தமிழ்நாடு அணி அவரது தலைமையில் இங்கே வந்ததை நேர்மறையாக பார்க்கிறேன்." என்று கூறியிருந்தார். 

டி.கே கடும் சாடல்  

இந்த நிலையில், ரஞ்சி கோப்பை அரையிறுதி தோல்வியில் கேப்டன் சாய் கிஷோரை குற்றம் சாட்டியதற்காக தமிழக பயிற்சியாளர் குலத்தன் குல்கர்னியை இந்திய அணி வீரரும், மூத்த தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பம் என்று நினைத்து, 7 ஆண்டுகளுக்குப் பிறகு அணியை அரையிறுதிக்குக் கொண்டு வந்த கேப்டனை ஆதரிப்பதற்குப் பதிலாக, பயிற்சியாளர் இப்படி கூறியிருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது." என்று அவர் பதிவிட்டுள்ளார். 

சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணிக்கு ஆதரவாக பேசியுள்ள முன்னாள் இந்திய மற்றும் தமிழக வீரர் டபிள்யூ.வி.ராமன், “நல்ல முயற்சி. சோதனைகள் மற்றும் இன்னல்கள் வரும். ஆனால் முக்கியமாக, நீங்கள் சரியான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டீர்கள். உண்மை சில சமயங்களில் உங்களை காயப்படுத்துவது போல, சரியானதைச் செய்வது ஏமாற்றத்தையும் தரலாம். ஆனால் அங்கேயே தங்கி அணிவகுத்துச் செல்லுங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார். 

2023-24 சீசனில் தான் முதல் முறையாக தமிழ்நாடு அணியின் கேப்டனாக சாய் கிஷோர் செயல்பட்டுள்ளார். 2016-17 சீசனுக்குப் பிறகு நாக் அவுட் போட்டியில் இருந்து தமிழக அணி வெளியேறியுள்ளது. இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் இந்த சீசனில் 9 போட்டிகளில் 53 விக்கெட்டுகளுடன், தமிழக அணியில் எலைட் பிரிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் தரவரிசையிலும் முன்னணியில் உள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘SO WRONG’: Angry Dinesh Karthik slams Tamil Nadu coach Kulkarni for blaming captain Sai Kishore in Ranji Trophy semifinal defeat

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dinesh Karthik Ranji Trophy Tamilnadu Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment