Dinesh Karthik Tamil News: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி நேற்று (செப்டம்பர் 10ம் தேதி) வெள்ளிக்கிழமை மான்செஸ்டரில் நடைபெற இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் 4வது போட்டி நடைபெறும் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும், உதவி பயிற்சியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். எனவே, நடவிருந்த 5வது போட்டிக்கு பயிற்சியாளர்கள் இல்லாமலே வீரர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நேரத்தில், இந்திய பிசியோதெரபிஸ்ட்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இது அவருடன் நெருக்கமாக தொடர்பில் இருந்த வீரர்களுக்கும் பரவி இருக்குமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே, வீரர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இருப்பினும், நிலைமையை மேலும் கடினமாக்காமல் இந்திய வீரர்களை தனிமைப்படுத்தி போட்டியை ரத்து செய்யும் முடிவுக்கு வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து 'ஸ்கை ஸ்போர்ட்ஸ்' ஊடகத்திற்கு மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் அளித்துள்ள பேட்டியில்,
போட்டி துவங்குவதற்கு முந்தைய நாள் நள்ளிரவு வரை வீரர்கள் தூங்காமல் இருந்தார்கள் என்றும், 'பெரும்பாலான வீரர்கள் அதிகாலை 3 மணி வரை தூங்காமல் இருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், "இந்திய அணியில் உள்ள பல வீரர்களை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களில் பெரும்பாலோனோர் முந்தைய நாள் நள்ளிரவு வரை தூங்கவே இல்லை. அதில் சிலர் அதிகாலை 3 மணி வரை தூங்காமல் இருந்தனர். மேலும் போட்டிக்கு தயாராக இருக்க வேண்டுமா? இல்லை என்ன நடக்கப்போகிறது ? என்று தெரியாமலேயே பதட்டத்தில் இருந்தனர். அதோடு மனரீதியாக அவர்களால் போட்டிக்கு தயார் படுத்திக்கொள்ள முடியவில்லை. போட்டியில் என்ன நடக்கும் என்பதை யோசித்து பெரும்பாலானோர் தூங்கவில்லை.
இருப்பினும் சரியான முடிவாக இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்களுக்கு வருத்தம் அளித்தாலும் எதிர் வரும் பிரச்சனைகளை சமாளிக்க இது ஒன்றுதான் சரியான முடிவு என்கிற காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.