'நாகினி இஸ் பேக்'… வங்கதேசத்தை கலாய்த்து தள்ளிய டி.கே கிண்டல் ட்வீட்!
பாம்பு களத்தில் புகுந்ததை பார்க்கையில், "நாகினி வந்துவிட்டது. நான் அதை வங்கதேசம் என்று நினைத்தேன்," என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கேலி செய்துள்ளார்.
பாம்பு களத்தில் புகுந்ததை பார்க்கையில், "நாகினி வந்துவிட்டது. நான் அதை வங்கதேசம் என்று நினைத்தேன்," என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கேலி செய்துள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது மைதானத்திற்குள் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Dinesh Karthik's reaction to Snake Tamil News: இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடரைப் போல் இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடர் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றை ஆட்டத்தில் கல்லே டைட்டன்ஸ் - தம்புல்லா ஆரா அணிகள் மோதின. டாஸ் வென்ற தம்புல்லா ஆரா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் கல்லே டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
Advertisment
தொடர்ந்து 181 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தம்புல்லா ஆரா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் தான் எடுத்தது. போட்டி டை ஆன நிலையில், நடைப்பெற்ற சூப்பர் ஓவர் ஆட்டத்தில் கல்லே டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
களத்திற்குள் புகுந்த பாம்பு
Advertisment
Advertisements
இந்த ஆட்டத்தில் தம்புல்லா ஆரா அணி 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்தது. அப்போது திடீரென மைதானத்துக்குள் பாம்பு புகுந்தது. இதனால் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. களத்தில் இருந்த அம்பயர்கள் போட்டியை நிறுத்துமாறு கூறினர். அதன்பின்னர் அம்பயர் மற்றும் மைதான ஊழியர்கள் இணைந்து பாம்பை களத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திலே பாம்பும் வந்த வழி திரும்பி சென்றது.
இந்நிலையில், லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது மைதானத்திற்குள் பாம்பு புகுந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், அதற்கு தரமான கமெண்ட் ஒன்றையும் போட்டுள்ளார்.
அதில், அவர் பாம்பு களத்தில் புகுந்ததை பார்க்கையில், "நாகினி வந்துவிட்டது. நான் அதை வங்கதேசம் என்று நினைத்தேன்," என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பொதுவாக, வங்கதேச அணியினர் பெரிய போட்டிகளில் முக்கிய வெற்றியை ருசித்து விட்டால் நாகினி டான்ஸ் போட்டு எதிரணியை கடுப்பேத்துவார்கள். அதற்கு அந்த எதிராணிகளும் தக்க பதிலடி கொடுப்பார்கள். இதனை வங்கதேச அணியுடன் ஒப்பிட்டு, அந்த அணியினரை தினேஷ் கார்த்திக் கலாய்த்து தள்ளியுள்ளார்.