தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்: அணி முழு விவரம்

செய்யது முஸ்டாக் அலி கோப்பைக்காக  தினேஷ் கார்த்திக்  தலைமையில் தயாராகும் தமிழக அணி. இம்முறை கழட்டி விடப்பட்ட முரளி விஜய், துணை கேப்டனாகும் விஜய் சங்கர்.

Dinesh karthic captain for taminadu cricket team -தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்: அணி முழு விவரம்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக தினேஷ் கார்த்திக்  தேர்வு செய்ய படவில்லை. என்றபோதிலும் ஜனவரி 10ம் தேதி  கொல்கத்தாவில் நடக்கும்  செய்யது முஸ்டாக் அலி கோப்பைக்காக தமிழக அணிக்கு தலைமை தாங்குகிறார். ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்படுள்ளது.

ஆர் அஸ்வின், எஸ். சுந்தர், மற்றும் டி. நடராஜன் போன்றோர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ளார்கள்.
எனவே இவர்களுக்கு பதிலாக எம் அஸ்வின், ஆர். சாய் கிசோர், மற்றும்  எம். சித்தார்த் சுழற்பந்து வீசுவார்கள். முழங்கால் காயம் காரணமாக 3 ஆண்டுகள்  அணியில் விளையாடாமல் இருந்த அஸ்வின் கிறிஸ்ட் மீடியம் – பாஸ்ட் வீச உள்ளார். கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியர் தமிழக அணியில் இணைந்து விளையாடுகிறார்.

தன் சொந்த காரணங்களால் விளையாடப் போவதில்லை என முரளி விஜய் கூறியதால் அவர் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மீடியம் – பாஸ்ட் வீசும் கே. விக்னேஷ்க்கு  கரோனா டெஸ்ட்டில் பாசிட்டிவ் என வந்துள்ளதால் அவருக்கு பதில் ஆர் எஸ் ஜெகநாத் சினிவாஸ் அணியில் இடம் பெறுகிறார்.  அணி வலுவான நிலையிலும் அதே நேரத்தில் அனுபவம் வாய்ந்த வீர்களின் பலம் பொருந்தியும் உள்ளது என தேர்வுக்குழு தலைவர் வாசுதேவன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

2018 – 2019 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று தோல்வியை தழுவினோம். இந்த முறை கண்டிப்பாக வெல்லும் முனைப்பில் உள்ளளோம். அதேபோல் இம்முறை  அணி எல்லா வகையிலும் நன்கு கட்டமைக்க பட்டுள்ளது. வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். ஜனவரி 3ம் தேதி தமிழக அணி கொல்கத்தா சென்று பயிற்சி மேற்கொள்ளும். குரூப் பி அட்டவணையில் தமிழக அணி சேர்க்கப்பட்டுள்ளது எனவும்  கூறியுள்ளார்.

அணி விபரம்:

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்), பி அபராஜித், பி இந்திரஜித், எம் ஷாருக் கான், சி ஹரி நிஷாந்த், கேபி அருண் கார்த்திக், பிரடோஷ் ரஞ்சன் பால், என் ஜெகதீசன், அஸ்வின் கிறிஸ்ட், எம் முகமது, ஜி பெரியசாமி, சந்தீப் வாரியர், ஜே கவ்சிக், ஆர் சோனு யாதவ், எம் அஸ்வின், ஆர் சாய் கிஷோர், எம் சித்தார்த், எல் சூரியப்பிரகாஷ், ஆர் எஸ் ஜெகநாத் சினிவாஸ்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dinish karthic captain for taminadu cricket team

Next Story
ஊக்க மருந்து விவகாரம் : இந்திய கூடைப்பந்து வீரருக்கு 2 ஆண்டுகள் தடை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express