சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கோவையில் மாநில அளவில் மாற்றுத்திறனளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி நடைபெற்றது. காளப்பட்டி பகுதியில் உள்ள குணா ஸ்போர்ட்ஸ் வளாகத்தல் நடைபெற்ற இப்போட்டியில் வீரர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக கோவையில்,பாரா வாலிபால் சங்கம் சார்பாக இப்போட்டி நடத்தப்பட்டது. இதில், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், திருப்பூர், ராமநாதபுரம் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதன் இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடிய கோவை அணியினர் கோப்பையை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்றுள்ள சிட்டிங் வாலிபால் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் இணைக்க வேண்டும் என வீரர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
செய்தி - பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“