Advertisment

ஐ.சி.சி. கிரிக்கெட்: ஒளிபரப்பு உரிமத்தை பகிரும் ஜீ - டிஸ்னி ஸ்டார் நிறுவங்கள்

A strategic alliance between Disney Star and ZEE will give cricket fans more options as regards to watching the ICC men’s events for the 2024-27 cycle Tamil News: ஆண்கள் உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டிகளை இந்தியாவில் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை ஜீ-க்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Disney Star and ZEE share ICC men’s events telecasting rights for the 2024-27 cycle

கிரிக்கெட் பந்து

Disney Star shares part of ICC media rights with Zee Tamil News: 2024-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு இறுதிவரை நடைபெறும் அனைத்து வகையான ஆண்கள் மற்றும் பெண்கள் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பு செய்வதற்கான டி.வி. மற்றும் டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்தது. இதற்காக அந்த நிறுவனம் ஏறக்குறைய ரூ.24 கோடி ஆயிரம் வழங்க வேண்டியுள்ளது.

Advertisment

இந்நிலையில், நிதி சுமையை கருத்தில் கொண்டு இவற்றின் ஒளிபரப்பு உரிமத்தை ஜீ குழுமத்துடன் டிஸ்னி ஸ்டார், ஐ.சி.சி. ஒப்புதலோடு தற்போது பகிர்ந்துள்ளது. அதாவது இந்த 4 ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆண்கள் உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டிகளை இந்தியாவில் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை ஜீ-க்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவற்றுக்கான இணையவழி ஒளிபரப்பான டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் தன்னிடம் வைத்துள்ளது. மேலும் பெண்கள் உலக கோப்பை போட்டிக்கான டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமத்தையும் டிஸ்னி ஸ்டார் தன்னகத்தே கொண்டுள்ளது.

இதுதொடர்பாக இரு நிறுவங்களும் வெளியிட்டுள்ள கூட்டு செய்திக்குறிப்பில், "ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட். (ZEE) மற்றும் டிஸ்னி ஸ்டார், இன்று அவர்கள் ஒரு மூலோபாய உரிம ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஆண்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட (U) தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி ஸ்டார் உரிமம் பெறும். -19) நான்கு வருட காலத்திற்கான உலகளாவிய நிகழ்வுகள், ZEE பகிர்ந்துள்ளது. டிஸ்னி ஸ்டார் அதன் டிஜிட்டல் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலம் அனைத்து ஐசிசி போட்டிகளையும் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான பிரத்யேக இல்லமாகத் தொடரும். இந்த ஏற்பாட்டிற்கு ஐசிசி கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தச் சங்கம், ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை (2024, 2026), ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி (2025) மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை (2027) உள்ளிட்ட ஐசிசி ஆண்கள் நிகழ்வுகளின் பிரத்யேக தொலைக்காட்சி உரிமையை வைத்திருப்பவராக ZEE ஐ வழங்குகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

2024-27 சுழற்சியில் ஐசிசி நிகழ்வுகள்

2024: ஆண்கள் T20 உலகக் கோப்பை, பெண்கள் T20 உலகக் கோப்பை, U-19 ஆண்கள் உலகக் கோப்பை

2025: சாம்பியன்ஸ் டிராபி, WTC இறுதிப் போட்டி, பெண்கள் 50 ஓவர் உலகக் கோப்பை, U-19 பெண்கள் T20 உலகக் கோப்பை

2026: ஆண்கள் T20 உலகக் கோப்பை, பெண்கள் T20 உலகக் கோப்பை, U-19 ஆண்கள் உலகக் கோப்பை

2027: ஆண்கள் 50 ஓவர் உலகக் கோப்பை, WTC இறுதிப் போட்டி, பெண்கள் T20 சாம்பியன்ஸ் டிராபி, U-19 பெண்கள் T20 உலகக் கோப்பை

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Cricket Sports Zee Tv Indian Cricket Icc Star Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment