/indian-express-tamil/media/media_files/VdyGm3P4uMfVbn1wen4b.jpg)
கோவை காளம்பாளையம், தீத்திபாளையம், கோவை புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவரும் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கராத்தே, கூடோ, யோகா போன்ற பயிற்சிகளை வழங்கி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/kBjEDTTH7USJOc8Oeabu.jpeg)
தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மற்றும் செல்வபுரம் சிருஷ்டி வித்யாலாயா மெட்ரிக் பள்ளி ஆகியோர் இணைந்து மாவட்ட அளவிலான யோகா போட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பொது மற்றும் சிறப்பு பிரிவுகளில், போட்டிகள் நடைபெற்றன.
/indian-express-tamil/media/media_files/HoeOXI0gxzWVNhqyyq2b.jpeg)
இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 5 வயது முதல் 17 வயது வரை வரையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு க்ராசனம், திரிகோண ஆசனம், பத்மாசனம், ஹலாசனம், மச்சாசனம், சுப்த வச்ராசனம், சிரசாசனம் , உள்ளிட்ட பல்வேறு வகையான ஆசனங்கள் செய்து அசத்தினர்.
/indian-express-tamil/media/media_files/GjwiasIsgWz17mzPOdMV.jpeg)
போட்டிகளில் நடுவர்களாக திருநாவுக்கரசு, வெள்ளிங்கிரி, சரண்யா, பிரியா, பாக்யா, நவநீதன், ஹரிஹரன், கஸ்தூரி, பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் தெரிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/zUCRSQVW993PimWA2tCc.jpeg)
இதில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் தாளாளர் பொன்னுசாமி, செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபெறும் போட்டிகளுக்கான துவக்க விழா அகாடமியின் நிறுவனர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us