IPL 2023 retention - Dwayne Bravo - Chennai Super Kings Tamil News
IPL 2023 retention - Dwayne Bravo - Chennai Super Kings Tamil News: 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் 3வது வாரத்தில் தொடங்கி மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது.
Advertisment
இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை நேற்று மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு முடிந்ததால் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
வயதை காரணம் காட்டி பிராவோவை கழற்றி விட்டது சரியா?
Advertisment
Advertisement
அவ்வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதன்படி, சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தொடர்கிறார். நீண்ட நாட்களாக சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் சென்னை அணி நிர்வாகத்தை சுற்றி சுழன்ற நிலையில், தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதன்படி, ஜடேஜாவை சிஎஸ்கே அணி தக்க வைத்துள்ளது. அதே நேரத்தில், அந்த அணி டுவைன் பிராவோ-வை விடுவித்துள்ளது.
அதிரடி ஆல்ரவுண்டர் வீரரான டுவைன் பிராவோ அழுத்தமான சூழ்நிலைகளிலும் துல்லியமான யார்க்கர்கள் மற்றும் ஸ்லோயர் பந்துகளை வீசி மிரட்டுவார். அதோடு அந்தப் பந்துகளில் விக்கெட்டுகளையும் எடுத்து அசத்துவார். விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு அவர் போடும் க்யூட் டான்ஸ் ரசிகர்களையும் சேர்ந்து ஆட வைக்கும். அத்தகைய அசத்தல் மன்னனை சென்னை அணி விடுத்துள்ளது.
தற்போது பிராவோவின் வயது, 39 ஆக உள்ளது. ஆனாலும் அவரால் சிறப்பான பங்கினை அளிக்க முடியும். அவரை தற்போது அணி தேர்வு செய்யாத நிலையில், அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
சென்னை அணியில் வீரர்கள் தக்கவைத்தது மற்றும் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பேசிய சிஎஸ்கே நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதான், “ஏலத்திற்குச் செல்லும் போது எங்களிடம் இப்போது 20.45 கோடி ரூபாய் உள்ளது. நாங்கள் விரும்பும் வீரர்களை பெற முயற்சிப்போம். ஆனால் வேறு சில அணிகளுக்கும் பணம் இருப்பதால் இது கடினமான ஏலமாக இருக்கும்." என்றார்.
ஜடேஜா அணியில் இருப்பது குறித்து பேசிய அவர், “ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நாங்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருந்தோம்."என்றார்.
சென்னை அணியில் 37 வயதான அம்பதி ராயுடுவை அணி நிர்வாகம் தக்கவைத்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த குறித்து காசி விஸ்வநாதான்,“அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அவர் சிறப்பாக செயல்படுவார் என்று கேப்டன் நம்புகிறார்." என்று அவர் கூறியுள்ளார்.