Djokovic wins 10th Australian Open, 22nd Grand Slam Tamil News | Indian Express Tamil

ஆஸ்திரேலிய ஓபன்: 10வது பட்டத்தை வென்ற ஜோகோவிச்… நடாலின் சாதனையை முறியடிப்பு!

ஆஸ்திரேலியாவில் ஜோகோவிச்சின் 10வது கோப்பை வென்று அவர் ஏற்கனவே வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Djokovic wins 10th Australian Open, 22nd Grand Slam Tamil News
Novak Djokovic of Serbia plays a backhand return to Stefanos Tsitsipas of Greece during the men's singles final at the Australian Open tennis championships in Melbourne. (AP)

 Novak Djokovic – Australian Open Tamil News: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- சிட்சிபாஸ் (கிரீஸ்) பலப்பரீட்சை நடத்தினர். தொடக்கம் முதலே பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஜோகோவிச் சிறப்பாக விளையாடினார். இதனால் அவர் 6-3, 7-6 , 7-6 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தினார்.

இந்த அபார வெற்றியின் மூலம் ஜோகோவிச் தனது 10வது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார். இது ஜோகோவிச் வென்றுள்ள 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இந்த வெற்றியின் மூலம், ஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளார். மேலும், ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலின் (22 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை ஜோகோவிச் முறியடுத்துள்ளார்.

Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer

ஆஸ்திரேலியாவில் ஜோகோவிச்சின் 10வது கோப்பை வென்று அவர் ஏற்கனவே வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். அவரது 22 பெரிய சாம்பியன்ஷிப்புகள் – விம்பிள்டனில் இருந்து 7 , யு.எஸ். ஓபனில் இருந்து 3 மற்றும் பிரெஞ்ச் ஓபனில் இருந்து 2 – டென்னிஸ் வரலாற்றில் என அசத்தல் சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஜோகோவிச் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதிக்கப்படாத ஒரு வருடத்திற்கு பிறகு, 35 வயதான அவர் நம்பமுடியாத கம்பேக் கொடுத்து மிரட்டியுள்ளார்.

முன்னதாக, முக்கிய இறுதிப் போட்டிகளில் சிட்சிபாஸ் 0-2 என்று தோல்வி அடைந்துள்ளார். 2021 பிரெஞ்சு ஓபனில் ஜோகோவிச்சிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Djokovic wins 10th australian open 22nd grand slam tamil news