Indian cricket Tamil News: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் அரேங்கேறுகிறது. இதற்கான இந்திய அணியை தயார் செய்யும் விதமாக வீரர்கள் சுழல் முறையில் விளையாட வைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையை இந்திய கிரிக்கெட் வாரியம் மிகவும் உன்னிப்பாகவும், கவனமாகவும் பார்த்து வருகிறது.
கடந்தாண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தகுதிச்சுற்றோடு வெளியேறிய நிலையில், இம்முறை அதைத் தகர்த்து எரிந்து விட்டு இறுதிப்போட்டிக்குள் அணி நுழைய வேண்டும் கோடிக் கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும், உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்த விவாதங்களும் அன்றாட நடந்த வண்ணம் உள்ளது. தவிர, உலகக் கோப்பைக்கான அணி எப்படி இருக்கும் என்பது குறித்த நிறைய ஊகங்களும் தற்போது நடந்து வருகின்றன,
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது முக்கிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், அவரைப் பொறுத்தவரை, ஃபினிஷர் என்பவர் 8வது மற்றும் 12வது ஓவருக்கு இடையில் களம் புகுந்து, ஆட்டத்தில் இறுதி ஓவர் வரை அங்கேயே இருந்து, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் ஒருவரே சிறந்த ஃபினிஷர் என்று தெரிவித்துள்ளார்.
அவ்வகையில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இந்திய அணியில் உள்ள சிறந்த ஃபினிஷர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்திய அணியில் தற்போது ஃபினிஷர் ரோலுக்கு பெயர் போனவராக தினேஷ் கார்த்திக் இருந்து வருகிறார். மேலும், அவர் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். ஆனால் உண்மையான ஃபினிஷர்கள் சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் என்று தான் கருதுவதாக ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். அதோடு அவர், ரிஷப் பண்ட் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோரின் பெயரையும் ஃபினிஷர்களாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோ ஃபாலோ தி ப்ளூஸில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசுகையில், "எனது புத்தகத்தில், ஃபினிஷர் என்பது 8வது அல்லது 12வது ஓவரில் இருந்து 20வது ஓவர் வரை பேட்டிங் செய்து இந்தியாவுக்கு போட்டியை வெல்லக்கூடிய பையனாக இருக்க வேண்டும். கே.எல்.ராகுல் சிறந்த ஃபினிஷர், ரோகித் ஷர்மா நல்ல பினிஷர். அவர்கள் தொடக்க வீரர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆனால், கடைசி 5 ஓவர்களில் பேட்டிங் செய்யும் ஒருவரை என்னால் 'அவர் ஒரு ஃபினிஷர்' என்று சொல்ல முடியாது. நான் தினேஷ் கார்த்திக்கை ஒரு சிறந்த ஃபினிஷர் என்று சொல்வேன் ஆனால் உண்மையான ஃபினிஷர்கள் சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள்தான். அவர் மிகச் சிறந்த ஃபினிஷரராக இருக்கிறார். இதேபோல், ரிஷப் பண்ட் இருக்கிறார். அவரும் ஒரு சிறந்த ஃபினிஷர். ஹர்திக் பாண்டியா இருக்கிறார், அவர் ஒரு சிறந்த ஃபினிஷரும் கூட. எனவே, 8-வது ஓவரில் இருந்து 20-வது ஓவர் வரை அணியை எடுத்துச் செல்லும் ஒரு பையன்தான் ஃபினிஷர் என்பதை நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
It's time to finish the game, who would you pick? 🤔
Watch @KrisSrikkanth & @JockMore debate who are the best finishers for #TeamIndia and have your say 👇.#AsiaCup #BelieveInBlue pic.twitter.com/eBgGVoxzWf— Star Sports (@StarSportsIndia) August 9, 2022
இந்த ஷோ-வில், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பரும், தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவருமான கிரண் மோரும் பங்கேற்று இருந்தார். ஆசிய கோப்பைக்கான இந்திய அணி குறித்து அவர் பேசுகையில், அணியில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சுத் தேர்வானது, மற்றொரு ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளரைச் சேர்க்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஹர்திக் பாண்டியா 140-147 கிமீ வரை பந்துவீசி மீண்டும் ஃபார்முக்கு வந்த விதம். அணியில் 4 ஓவர்கள் வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன், அணிக்காக ரன்களையும், ஃபினிஷரையும் பெறக்கூடிய ஒரு வீரரை அணியில் கேப்டன் பெறும்போது, அத்தகைய வீரர்கள் அணிக்கு தேவை.
ஆனால் அறிவிக்கப்பட்ட இந்த அணி (ஆசியா கோப்பைக்கு) டி20 உலகக் கோப்பைக்கு அதே அணியாக இருக்காது என்று நான் கூற விரும்புகிறேன். இந்திய அணியில் முகமது ஷமி நிச்சயம் இடம் பெறுவார். அவர்கள் எடுக்கும் பேக்-அப் இறுதி அணி அல்ல, இது உலகக் கோப்பைக்கான தயாரிப்பு மட்டுமே. முகமது ஷமி கண்டிப்பாக உலகக் கோப்பைக்கு செல்ல வேண்டும் என்று நான் கூறுவேன்.
ராகுல் டிராவிட் செயல்படும் செயல்முறை அவர் அணியைக் கையாளும் விதம் நன்றாக இருக்கிறது. எந்த ஒரு நல்ல பந்து வீச்சாளரும் காயத்தால் கீழே விழுந்தால், அவருக்கு பேக்-அப் வீரர் இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் அவேஷ் கான் அவரது இடத்தை நிரப்புவார். ஏனெனில் நீங்கள் எப்போது காயமடையலாம் என்று உங்களுக்குத் தெரியாது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள். பும்ரா தற்போது காயமடைந்துள்ளார், எனவே முகமது ஷமி அல்லது பும்ரா நிச்சயமாக உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா செல்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.”என்றும் கிரண் மோர் கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.