Rishabh Pant Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் விக்கெட் - கீப்பர் வீரர் ரிஷப் பண்ட். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார். இங்கிலாந்தில் மேட்ச்-வின்னிங் சதம் அடித்ததன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். ஆனால், தனது உலகத் தரம் வாய்ந்த ஆட்டத்தை டி20-யில் பிரதிபலிக்கத் தவறிவிட்டார்.
இதுவரை 64 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட் 23.1 சராசரியில் 970 ரன்கள் எடுத்துள்ளார், இது அவரது தரத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக உள்ளது. ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர். இதனால், டி20 உலகக் கோப்பையில் அவரை விட விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக்கை அணி நிர்வாகம் விரும்பியது.
இருப்பினும், பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி உட்பட இரண்டு போட்டிகளில் விளையாடினார். ஆனால், அவரால் அந்தப் போட்டியில் தனது முத்திரையை பதிக்க முடியவில்லை. இரண்டு போட்டிகளில் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தார் பண்ட். சில கிரிக்கெட் வல்லுநர்கள் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடுவதற்கான அழுத்தத்தை நோக்கி சுட்டிக் காட்டுகின்றனர். இது பேட்டராக பண்ட்டின் ஆச்சரியமான புள்ளிவிவரங்களுக்கு காரணமாக இருக்கலாம்.
தினேஷ் கார்த்திக் கருத்து
இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் வீரர் தினேஷ் கார்த்திக், டி20 உலகக் கோப்பையின் போது ரிஷப் பண்டை மிடில் ஆர்டரில் ஆட வைப்பது அணி நிர்வாகத்திற்கு கடினமாக இருந்தது என்றும், அவருக்கு தொடக்க வீரர் ஸ்லாட் தான் சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
கிரிக்பஸ் இணைய பக்கத்திடம் பேசிய தினேஷ் கார்த்திக் “ரிஷப் பண்ட்டின் ஷாட்களை ஆடும் திறமையை நாம் நிச்சயமாக அறிவோம். மேலும் களத்தில் இருக்கும்போது, அவரால் பவர்பிளேயில் சிந்திக்காமல் உற்சாகமாக (குங்-ஹோ) ஆட முடியும். எனவே நாம் அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பளிக்க வேண்டும்.
சுவாரஸ்யமாக, அவர் தொடக்க வீராக களமாடும் போது அவரது ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக உள்ளது. அவர் மைதானத்தில் உள்ள ஃபீல்டை விரும்புகிறார். பந்துவீச்சாளர்களை அவர் அழுத்தத்தில் தள்ள விரும்புகிறார்.
அவர் ஸ்ட்ரோக் விளையாட்டிற்கு வரும்போது எவருக்கும் இரண்டாவதாக இல்லை. மேலும் பல சர்வதேச பந்துவீச்சாளர்களை அதிகம் குழப்பியுள்ளார். அவரிடமிருந்து சில தோல்விகள் இருக்கும் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அவர் ஒரு அற்புதமான வீரர்.
ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், ஒருநாள் கிரிக்கெட்டிலும் பெரிய அளவில் தனது இடத்தைப் பிடித்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். டி20களில், அவர் தனது உரிமைக்காக வித்தியாசமான நிலையில் பேட் செய்து இந்திய அணியில் வேறு இடத்தில் வருகிறார். மேலும் அவரை எங்கு பொருத்துவது என்று அவர்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
உங்களிடம் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருக்கும் போது, ரிஷப் பண்டை நீங்கள் எங்கே பொருந்துவீர்கள்? எங்களுக்கு ஒரு இடது கை வீரர் தேவை. ஆனால் அவரை எங்கே விளையாடுவது? நம்பர் 3ல் கோலி என்ன செய்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். சூர்யகுமார் யாதவைப் பற்றி பேசவே வேண்டாம். அவர் உலகின் சிறந்த வீரர். உடனே நாங்கள் எண்.5 ல் பண்ட் கீழே வருகிறோம். அவர் அங்கு பேட் செய்ய வேண்டுமா அல்லது ஓப்பன் செய்ய அவருக்கு வாய்ப்பளிக்க முடியுமா என்று பார்ப்போம்." என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
ராபின் உத்தப்பா கருத்து
முன்னதாக, ரிஷப் பண்ட் குறித்து பேசிய முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் வீரர் ராபின் உத்தப்பா, அவருக்கு ப்ரோமோஷன் கொடுத்து அவரை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஸ்போர்ட்ஸ்கீடா இணைய பக்கத்திற்கு அளித்த பேட்டியில் ராபின் உத்தப்பா, "நியூசிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும், அவர் நிச்சயமாக ஆர்டரில் முதலிடத்தில் விளையாட வேண்டும். டி20 கிரிக்கெட்டில் அவர் சிறந்து விளங்கினார். அங்குதான் அவர் முன்னேறிச் செல்வார் என்று நான் நினைக்கிறேன்.
அவர் ஒரு மேட்ச் வின்னர், கேம்-சேஞ்சர், மேலும் அவர் தனது பேட்டிங்கின் மூலம் இந்தியாவுக்கான போட்டிகளை ஒற்றைக் கையால் எளிதாக வெல்ல முடியும். அடுத்த 10 ஆண்டுகளில் டி20 கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய வீரராக இருப்பார் என்று நினைக்கிறேன்." என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.