News about T20 World Cup, Temba Bavuma in tamil: தென்ஆப்பிரிக்காவின் உத்வேகம் தரும் முதல் முழுநேர கறுப்பின கேப்டனாக டெம்பா பவுமா உள்ளார். தனது டி20 கிரிக்கெட்டைப் புதுப்பிக்க இந்தியா வந்த அவர் மனம் உடைந்த மனிதரானர். சில நாட்களுக்கு முன்பு, புதிய தென்ஆப்பிரிக்கா டி-20 தொடருக்காக நடந்த மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்க விருப்பம் காட்டவில்லை.
வெளிப்படையாக காயப்பட்ட அவர், பின்னர் ஆழமான காரணங்களை வெளிப்படுத்துவது பற்றிய குறிப்புகளை கைவிட்டு, இந்தியா வந்தார். ஆனால் அது அவருக்கு பலன் கொடுக்கவில்லை. உலக கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக மிகவும் கண்ணியமான மனிதரைக் கண்டுபிடிப்பது கடினம். ஆனால் அவர் தான் அணியில் இருப்பதால் தனது அணிக்கு தான் பின்னடைவை என்று நினைக்கிறார். அவருக்காக அணியின் பயிற்சியாளர் மார்க் பௌச்சர், ஐடன் மார்க்ரம் போன்ற சக வீரர்கள் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் ஆகியோரிடமிருந்து ஊக்கமளிக்கும் வார்த்தைகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. அவர்கள் “டெம்பா இந்த வேலைக்கு சரியான மனிதர். அவரது ஃபார்ம் சரியான நேரத்தில், சரியான இடத்தில் வரும், அது டி20 உலகக் கோப்பையை விட சிறந்தது எதுவுமில்லை.” என்கிறார்கள்.

ஆனால் உணர்ச்சிகளைத் தாண்டி, தென்ஆப்பிரிக்காவின் புதிய டி20 தொடரின் அணியின் உரிமையாளர்கள் ஏற்கனவே பதிலளித்துள்ள கேள்வியைக் கேட்க வேண்டிய நேரம் இது.
பவுமாவின் டி-20 ஸ்ட்ரைக் ரேட் 116.49 ஆகவும் அவரது சராசரி 23.54 ஆகவும் உள்ளது. இதில் அவர் விளாசிய 50 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களும் அடங்கும். அவர் 2022ல் 82.05 ஸ்ட்ரைக் ரேட்டில் ஏழு இன்னிங்ஸ்களில் 64 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பாவுமாவின் இடத்திற்கு இதுவரை போட்டியாளராக மாறாமல் இருக்கும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் சமீபத்திய தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஒட்டுமொத்த டி-20 ஸ்ட்ரைக் ரேட் 125 ஆகவும் சராசரி 29 ஆகவும் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 147.22 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு முன் தென்ஆப்பிரிக்காவின் கடைசி தொடரான இங்கிலாந்துக்கு எதிராக, அவரது ஸ்ட்ரைக் ரேட் 161.22 ஆக அதிகரித்தது. 46 டி20 போட்டிகளில் 22 சிக்ஸர்கள் மற்றும் 160 பவுண்டரிகள் என அவரது பவுண்டரி அடிக்கும் வீதம் பவுமாவை விட அதிகமாக உள்ளது.
ரெட் ஹாட் பார்ம் vs கேப்டன் கரிஸ்மாடிக். அவரது கவர் டிரைவ்கள் மற்றும் ஷார்ட் ஆர்ம் புல் ஷாட்களுக்கு பெயர் பெற்ற ஹென்ட்ரிக்ஸ், சுழற்பந்து வீச்சுக்கு எதிராக திணறினார். ஆனால் தாமதமாக, அவர் ரன்களை பெறுவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளார்.

டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மீண்டும் ஃபார்மிற்கு வந்துள்ள டேவிட் மில்லர் மற்றும் எய்டன் மார்க்ரம் போன்ற வீரர்கள் கொண்ட மிடில் ஆர்டரை தென் ஆப்பிரிக்க அணி வைத்துள்ளது. இதுவரை ஐசிசி நடத்திய பெரிய தொடர்களில் ஒரு கோப்பை கூட வெல்லாமல் இருந்து வரும் அந்த அணி, அதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கேப்டன் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்ற நம்பிக்கையில் உலகக் கோப்பைக்கு செல்வது விவேகமானதாக இருக்காது.
தென்ஆப்பிரிக்கா பவுமாவின் தலைமையை மிகவும் மதிக்கிறதா? அவர்கள் அவருக்கு டி-20 உலக கோப்பை அணியில் வாய்ப்பு கொடுப்பார்களா? அவர் ஆஸ்திரேலியாவின் பவுன்சர் ஆடுகளங்களில் தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என்று அணியினர் நம்புகிறார்களா அல்லது அவர்கள் ஹென்ட்ரிக்ஸின் ஃபார்முடன் செல்வார்களா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil