MS Dhoni and Virat Kohl Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரது மகள்கள் குறித்து ட்விட்டரில் ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டதற்காக குறைந்தது 6 சமூக ஊடக கணக்குகள் மீது டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) தானாக முன்வந்து, அவதூறான கருத்துக்களை வெளியிட்ட 6 சமூக ஊடக கணக்குகளை அடையாளம் கண்டது. இதையடுத்து, டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
“இதுவரை நடத்தப்பட்ட புகார் மற்றும் விசாரணையின் கருத்துகளின் அடிப்படையில், பிரிவு 67B(d) இன் கீழ் முதன்மைக் குற்றமாகும் (குழந்தைகளை வெளிப்படையான பாலியல் செயல்களில் சித்தரிக்கும் விஷயங்களை மின்னணு வடிவத்தில் வெளியிடுவதற்கும் அனுப்புவதற்கும் தண்டனை) தகவல் தொழில்நுட்ப சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.” என்று அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
मेरी नोटिस के बाद दिल्ली पुलिस ने @ImVKohli और @MSDhoni की बेटियों पर हुई अभद्र टिपण्णियों के मामले में FIR दर्ज कर ली है। बहुत जल्द सभी दोषी गिरफ़्तार होंगे और सलाख़ों के पीछे जाएँगे। pic.twitter.com/IPFE7Uky0x
— Swati Maliwal (@SwatiJaiHind) January 16, 2023
இந்த அடையாளம் காணப்பட்ட சமூக ஊடக பாயானளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்கேற்ப அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“