IND vs BAN 2nd Test: குல்தீப்-க்கு வாய்ப்பு மறுப்பு; டிராவிட், கே.எல்.ராகுல் மீது நெட்டிசன்கள் காட்டம்

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஆடும் லெவனில் இருந்து குல்தீப்பை நீக்கியதற்கு, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பொறுப்பு கேப்டன் ராகுல் மீது நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

Dravid, KL Rahul blasted for dropping Kuldeep Yadav in 2nd IND vs BAN Test Tamil News
Despite taking a five-wicket haul in the first Test, Kuldeep Yadav didn't find a place in India's second match of the series against Bangladesh Tamil News

Kuldeep Yadav – IND vs BAN 2nd Test Match 2022  Tamil News: வங்கதேசத்தில் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 14 ஆம் தேதி முதல் சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று (வியாழக்கிழமை) முதல் நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

குல்தீப்-க்கு வாய்ப்பு மறுப்பு… டிராவிட், கே.எல்.ராகுல் மீது நெட்டிசன்கள் காட்டம்

இந்த ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு மாற்றாக ஜெய்தேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிருப்பியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குல்தீப் 22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இணைந்து இருந்தார். அவரது அசத்தலான சுழல் வித்தையின் மூலம் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் மொத்தமாக 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மிரட்டினார். மேலும் முதல் ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இந்த நிலையில், 2010 ஆம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜெய்தேவ் உனட்கட்டை 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆடும் லெவன் அணியில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், குல்தீப்பை அணியில் இருந்து நீக்கியதற்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், இதற்கு காரணமாக இருந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பொறுப்பு கேப்டன் ராகுல் மீது குற்றம் சட்டி வருகின்றனர்.

நெட்டிசன்கள் சில பதிவுகள் இங்கே:

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Dravid kl rahul blasted for dropping kuldeep yadav in 2nd ind vs ban test tamil news

Exit mobile version