Rahul-dravid | india-vs-england: இந்தியாவில் சுற்றுப்பயணமாக வந்த பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்றது. இதன்மூலம் தொடரையும் கைப்பற்றிய இந்தியா, தொடரில் 2- 0 என்கிற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று (புதன்கிழமை) நடந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும், தொடரில் 2- 0 என முன்னிலையில் இருந்த இந்திய அணி கோப்பையை வென்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கும் உலகக் கோப்பை தொடருக்கு சோதனை ஓட்டமாக பார்க்கப்பட்டது. இந்த தொடரில் இரு அணிகளும் தங்களின் உலகக் கோப்பை அணி ஆடும் லெவனில் இடம் பெற உள்ள வீரர்களை களமிறக்கி சோதித்தது. இது இரு அணிக்கும் கை கொடுத்ததா என்பது தொடர் முன்னேறி நடக்கும் போது வெளிப்பப்படும்.
உலகக் கோப்பை அடுத்த வாரத்தில் தொடங்கும் நிலையில், இந்திய வீரர்கள் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டும் வருகிறார்கள். ஆனாலும், இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு முன் 'முழு பலம்' கொண்ட அணியாக களமிறக்கும் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பயிற்சியாளர் டிராவிட் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "அணியில் உள்ள வீரர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவுவதில் எங்களுக்கு சில சிக்கல்கள் உள்ளன. இது சற்று சமநிலைப்படுத்தும் செயலாக இருந்தது. குறிப்பாக சில வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. இன்றிரவு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ஒரு அணி புறப்பட்டு சென்றுள்ளது. அதனால் ருது (ருதுராஜ் கெய்க்வாட்) மற்றும் திலக் (வர்மா) போன்ற சில வீரர்கள் செல்ல வேண்டியிருந்தது. எனவே, இந்த ஆட்டத்தில் நாங்கள் கையாள வேண்டிய ஒரு ஏமாற்று வித்தையாக இருந்தது.
ஆனால் இல்லை. எங்களுக்கு ஒரு வாரம் உள்ளது என்று நம்புகிறேன். நாளை இரவு அல்லது மறுநாள் காலையில் நாம் நாளை அடையும் போது அனைவரும் கவுகாத்தியில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன், நாங்கள் முழு பலத்துடன் இருக்க வேண்டும். அணியில் உள்ள பிழையும் நீக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடந்தால் நன்றாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
வருகிற 30 ஆம் தேதி இங்கிலாந்தையும், அக்டோபர் 3 ஆம் தேதி நெதர்லாந்தையம் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் களமாடுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.