தோனி பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கம்பெனி சூதாட்டத்தில் ஈடுபடுகிறதா? பிசிசிஐ நிர்வாகி கருத்தால் பரபரப்பு

டிரீம் 11 நிறுவனம், ஐபிஎல்லை பிரபலப்படுத்துவதோடு மட்டுமல்லாது, 7 ஐபிஎல் அணிகளுடனும் கைகோர்த்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Dream 11 Online Fantasy Game இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல்) தொடரை பிரபலப்படுத்தும் பொருட்டு, ரு. 120 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்தான டிரீம் 11 ஆன்லைன் பேன்டசி கேம், சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பிசிசிஐ அமைப்பின் முக்கிய நிர்வாகியே கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டின் மினி வடிவான டுவென்டி20 கிரிக்கெட் தொடரை பிரபலப்படுத்தும் வண்ணம், ஆண்டுதோறும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர், இளைய தலைமுறையினரிடையே, மிகவும் பிரபலமடைந்துள்ளது. மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில், ஐபிஎல் நிர்வாகம், ஆன்லைன் பேன்டசி ஸ்போர்ட்ஸ் நிறுவனமான டிரீம் 11 நிறுவனத்துடன் கைகோர்த்தது. ரூ.120 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்த்ததில் டிரீம் 1 நிறுவனமும், ஐபிஎல் நிர்வாகமும் கையெழுத்திட்டன.

2008ம் ஆண்டில், பவித் ஷேத் என்பவரால் துவக்கப்பட்ட டிரீம் 11 நிறுவனம், 2018ம் ஆண்டில் தான் ஐபிஎல் அமைப்புடன் கைகோர்த்தது. ஐபிஎல் உடன் கைகோர்ப்பதற்கு முன்னர் டிரீம் 11 நிறுவனத்திற்கு 5 கோடி பயனாளர்களே இருந்ததாகவும், தற்போது 6.5 கோடி பயனாளர்கள் உள்ளனர். உலககோப்பை கிரிக்கெட் தொடருக்குள்ளாக, 8 கோடி பயனாளர்கள் என்ற அளவை எட்ட உள்ளதாக பவித் ஷேத் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பிராண்ட் அம்பாசிடராக நிறுவனம் நியமித்து, இளைஞர்களை தன்வசப்படுத்தியது. இதனிடையே, இந்நிறுவனம், மக்களை, தங்களுக்கு பிடித்த வீரர்களை கொண்டு அணியை உருவாக்கி சூதாட்டத்தை நடத்துகிறது. இதில் கலந்துகொள்ள ரூ.49 நுழைவுகட்டணம். மொத்த பரிசுத்தொகை ரூ 10 கோடி. போட்டியின் முன்னணி நிலை வருபவர்களுக்கு ரூ. 30 லட்சம் வைர வெல்ல வாய்ப்பு என்று கேளிக்கை போட்டி என்ற பெயரில் சூதாட்டத்தை நடத்தி வருவதாக பிசிசிஐ முக்கிய நிர்வாகி கருத்து தெரிவித்துள்ளார்.

அசாம், ஒடிசா, தெலுங்கானா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சூதாட்டத்திற்கு தடைஉள்ளதால், இம்மாநிலத்தவர்களால் டிரீம் 11 போட்டிகளில் பங்கேற்க இயலாது.  சூதாட்டம் குறித்து இந்தியாவின் பல்வேறு மாநில கோர்ட்கள் பல்வேறுதரப்பிலான தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

டில்லி மாவட்ட நீதிமன்றம் 2012ம் ஆண்டில் அளித்த தீர்ப்பு :

ஆன்லைன் கேம்ஸ் இணையதளங்கள், வணிகம் மற்றும் லாப நோக்கிலேயே நடத்தப்படுகின்றன. இதில் வீரர்களின் திறமை என்ற பதத்திற்கு வேலையில்லை.

குஜராத் ஐகோர்ட்டின் தனி நீதிபதி 2017ம் ஆண்டில் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளதாவது, பந்தயம் வைத்து எந்த விளையாட்டு விளையாடப்பட்டாலும் அது சூதாட்டம் தான்…

2019 ஜனவரி மாதம் கேரள ஐகோர்ட்டும் இதே தீர்ப்பை தான் வழங்கியுள்ளது.

டிரீம் 11 நிறுவனம், ஐபிஎல்லை பிரபலப்படுத்துவதோடு மட்டுமல்லாது, 7 ஐபிஎல் அணிகளுடனும் கைகோர்த்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Qualifier 1 Preview : மும்பை இந்தியன்ஸ் அணியை வரவேற்கின்றோம்… ! மோதிப் பார்க்க காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் !

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close