இன்று துபாயில் நடைபெற்ற ஐ பி எல் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி வென்றது. இதன் மூலம், ஐ. பி. எல் போட்டித் தொடரில், 5 வது முறையாக மும்பை அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
முதலில் ஆடிய டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 65 ரன்களும், ரிஷப் பண்ட் 56 ரன்களும் குவித்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி, சற்றுமுன்பு வரை, 5 விக்கெட்டுகள் இழந்து, 18.4 ஓவரில் இழக்கை எட்டியது.
இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை டெல்லி அணியை வென்றது மூலம் இறுதி போட்டிக்கான வாய்ப்பை டெல்லி தக்க வைத்துக் கொண்டது.
முன்னதாக, நவம்பர் 5ம் தேதி துபாயில் நடைபெற்ற முதல் பிளே ஆஃப் சுற்றில் மும்பை அணி 57 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி நேரடியாக இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.
இந்த ஐபிஎல் தொடரில், மும்பையுடன் மோதிய 3 ஆட்டத்திலும் டெல்லி அணி தோல்வியை கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, டெல்லி தனது தோல்விக்கு தகுந்த பதிலடி கொடுக்குமா? என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் அதிகமாக காணப்படுகிறது.
அதே நேரத்தில், ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மிகவும் வெற்றிகரமான அணியாகும். இதுவரை நடைபெற்ற 12 தொடர்களில் 4 முறை பட்டம் வென்றுள்ளது. சாம்பின்ஸ் லீக் இ20ப தொடரில் இருமுறை பட்டம் வென்றுள்ளது.
மும்பை அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், கிறிஸ் லின், தவல் குல்கர்னி, திக்விஜய் தேஷ்முக், ஹார்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஜேம்ஸ் பட்டின்சன், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரன் பொல்லார்ட், கிருணால் பாண்டியா, நாதன் கோல்டர் நீல், பிரின்ஸ் பல்வந்த் ராய், குவிண்டன் டி காக், ராகுல் சாஹர், செüரவ் திவாரி, சூர்யகுமார் யாதவ், டிரென்ட் போல்ட்.
டெல்லி அணி வீரர்கள்: ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ககிசோ ரபாடா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், சந்தீப் லேமிஷேன், இஷாந்த் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவன், ஷிம்ரோன் ஹெட்மயர், அலெக்ஸ் கேரி, மோஹித் சர்மா, பிருத்வி ஷா, லலித் யாதவ், அவேஷ் கான், அக்ஸர் படேல், துஷார் தேஷ்பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்ஷல் படேல், கீமோ பால், அமித் மிஸ்ரா, அன்ரிச் நார்ட்ஜே, டேனியல் சாம்ஸ்.