தோனியை சந்தித்த துரைமுருகன்.. பதிலுக்கு தோனி என்ன கொடுத்தார் தெரியுமா?

கேப்டன் தோனி சென்னையில் உள்ள முக்கிய நபர்களை சந்திக்கு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.

சென்னை வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் நேரில் சந்தித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த 27 ஆம் தேதி நடந்த ஐபிஎல் 2018 லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 2 ஆண்டு தடைக்கு பின்பு ஐபிஎல்லில் நுழைந்த சென்னை அணி அட்டாகசமாக ஆடி வெற்றி பெற்றது ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தது.

இந்த நிலையில், நேற்று மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் அனி, சென்னைக்கு வந்தது. அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கேப்டன் தோனி சென்னையில் உள்ள முக்கிய நபர்களை சந்திக்கு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் கலந்துக் கொண்டார். விசாரித்து பார்த்ததில் துரைமுருகனும் தோனி ஃபேன் தானாம். அரசியல், போராட்டங்கள் என இடைவிடாமல் எல்லாவற்றிலும் கலந்துக் கொண்டாலும் கிரிக்கெட் போட்டிகளையும் மிஸ் பண்ணமாட்டாராம். தோனியை சந்தித்த துரைமுருகனுக்கு பதிலுக்கு தோனி, ஆட்டோகிராஃப் போட்ட மஞ்சள் நிற டீ ஷர்ட்டை பரிசாக அளித்துள்ளார்.

புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட துரைமுருகன், தனியாக தோனியுடன் ஃபோட்டோ ஒன்றையும் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

×Close
×Close