சோகத்தில் முடிந்த சைக்கிள் ரேஸ்; கோமாவில் வீரர் – பதைபதைக்க வைக்கும் வீடியோ

கோமாவில் இருந்தாலும் தொடக்க சுற்றின் வெற்றியாளராக ஜாகோப்சென் அறிவிக்கப்பட்டார்

By: August 6, 2020, 10:29:51 PM

டச்சு சைக்கிள் பந்தய வீரர் ஃபேபியோ ஜாகோப்சென், தெற்கு போலந்தில் நடைபெற்ற டூர் டி போலோன் போட்டியின் போது நிகழ்ந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டதால், கோமாவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், தொடக்கச் சுற்றின் முடிவில் வெற்றியைப் பெறுவதற்காக, சக டச்சு வீரரான, டிலான் க்ரோன்வெகனை முந்தும் நோக்கில் செயல்பட்ட போது, தடுப்புகள் மீது மோதியதில் தூக்கி எறியப்பட்டார்.

Deceuninck-Quick-Step அணிக்காக போட்டியிடும் ஜாகோப்சென், ஆபத்தான நிலையில் ஒரு மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட போது, கோமாவுக்குள் தள்ளப்பட்டார் என்று டூர் டி போலோக்னே பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜாகோப்சென் தனது அசாத்திய வேகத்தால் முந்த முற்பட்ட போது, க்ரோன்வெகன் வேண்டுமென்றே அவரை தள்ளிவிடும் நோக்கில் செயல்பட்டதாலேயே இந்த மோசமான விபத்து ஏற்பட்டது. இது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.


சைக்கிள் போட்டியின் இயக்குனர் செஸ்லா லாங், இந்த விபத்துக்கு க்ரோன்வெகன் தான் என குற்றம் சாட்டினார். தவிர, பலரும் அவர் செய்து கிரிமினல் குற்றம் எனவும், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

கோமாவில் இருந்தாலும் தொடக்க சுற்றின் வெற்றியாளராக ஜாகோப்சென் அறிவிக்கப்பட்டார். விபத்தைத் தொடர்ந்து க்ரோன்வெகன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Dutch cyclist fabio jakobsen coma after crash in poland sports news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X