”சேலம் மண்ணின் மைந்தன்” – இந்திய அணிக்கு தேர்வான நடராஜனுக்கு முதல்வர் வாழ்த்து !

அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் - என்றும் முதல்வர் ட்வீட்

By: Updated: November 10, 2020, 12:26:44 PM

Edappadi Palanisamy took to Twitter to wish Cricketer Natarajan : சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் கவனிக்கத்தக்க ஒருவராக அமைந்திருந்தார் சேலத்தை சேர்ந்த நடராஜன். தன்னுடைய சிறு வயது கனவினை நினைவாக்க அவர் செய்த முயற்சிகள் மற்றும் அதற்கு கிடைத்த பலன்கள் பற்றி இந்த சீசன் முழுவதும் பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நாம் அறிந்து கொண்டோம்.

அவரின் உழைப்பிற்கு தக்க பலனாக அமைந்தது இந்திய அணியில் அவருக்கான இடம். இந்த அறிவிப்பு வெளியாகி நாட்கள் ஆன நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடராஜை வாழ்த்தி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அதில், ”உலக ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர்” என்று மேற்கோள்காட்டி தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார் முதல்வர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Edappadi palanisamy took to twitter to wish cricketer natarajan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X