Advertisment

Emerging Asia Cup 2023, Ind vs Pak: சாய் சுதர்சன் அதிரடி சதம்; 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இந்தியாவின் அபார பந்துவீச்சால் 205 ரன்கள் மட்டும் எடுத்த பாகிஸ்தான்; சாய் சுதர்சன் சதம், நிகின் ஜோஸ் அரை சதம்; 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

author-image
WebDesk
New Update
Emerging Asia Cup 2023: Pakistan A vs India A, 12th Match, Group B in tamil

இளம் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2023 தொடரில் பிரிவு - பி-யில் இந்திய ஏ, பாகிஸ்தான் ஏ அணிகளும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புள்ளது.

India A vs Pakistan A Live Score, ACC Men’s Emerging Asia Cup 2023 Tamil News: இளம் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2023 தொடர் இலங்கை மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவு - ஏ-யில் இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, ஓமன் ஏ ஆகிய அணிகளும், பிரிவு - பி-யில் இந்திய ஏ, பாகிஸ்தான் ஏ, அமீரகம் ஏ, நேபால் ஏ ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன.

Advertisment

இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் செல்லும். அரைஇறுதியில் வெல்லும் அணிகள் வருகிற ஞாயிற்றுகிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். பிரிவு - ஏ-யில் இருந்து இலங்கை ஏ, வங்கதேசம் ஏ அணிகளும், பிரிவு - பி-யில் இந்திய ஏ, பாகிஸ்தான் ஏ அணிகளும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடக்கும் 12வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏ - இந்தியா ஏ அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற முகமது ஹரீஸ் தலைமையிலான பாகிஸ்தான் ஏ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனால், யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி பந்துவீசி வருகிறது.

இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:

பாகிஸ்தான் ஏ அணி

சைம் அயூப், ஹசீபுல்லா கான், முகமது ஹாரிஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), கம்ரான் குலாம், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஒமைர் யூசுப், காசிம் அக்ரம், முபாசிர் கான், மெஹ்ரான் மும்தாஜ், முகமது வாசிம் ஜூனியர், ஷாநவாஸ் தஹானி

இந்தியா ஏ அணி

சாய் சுதர்சன், அபிஷேக் சர்மா, நிகின் ஜோஸ், யாஷ் துல் (கேப்டன்), ரியான் பராக், நிஷாந்த் சிந்து, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி, ஆர்.எஸ்.ஹங்கர்கேகர்

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அயூப் மற்றும் பர்ஹான் களமிறங்கினர். அயூப் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய யூசுப் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹசீபுல்லா கான் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் ஆடி வந்த பர்ஹான் 35 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த குலாம் 15 ரன்களிலும், ஹாரிஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் ஆடி வந்த ஹசீபுல்லா கான் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த காசிம் அக்ரம் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். மறுமுனையில் ஆடி வந்த முபாசிர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய அக்ரம் அரைசதம் அடித்தார். அடுத்து மெஹ்ரன் களமிறங்கிய நிலையில், அக்ரம் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாசிம் 8 ரன்களிலும், தஹானி 4 ரன்களிலும் அவுட் ஆக பாகிஸ்தான் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மெஹ்ரன் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹங்கர்கேகர் 5 விக்கெட்களையும், மனவ் சுதர் 3 விக்கெட்களையும், ரியான் பராக் மற்றும் நிசாந்த் சிந்து தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா பேட்டிங்

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்க்கு 58 ரன்கள் எடுத்தது. அபிஷேக் ஷர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சனுடன் நிகின் ஜோஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். மேலும் அரைசதம் விளாசினர். அரைசதம் அடித்த நிலையில், 53 ரன்களில் நிகின் ஜோஸ் அவுட் ஆனார்.

அடுத்து யாஷ் களமிறங்கினார். யாஷ் கம்பெனி கொடுக்க சாய் சுதர்சன் அதிரடியாக ஆடினார். 36 ஆவது ஒவரில் 2 பந்துகளை சிக்சருக்கு விளாசிய சாய் சுதர்சன் சதம் அடித்ததோடு, இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. சாய் சுதர்சன் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கும். யாஷ் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி 36.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் பந்துவீச்சில் முபாசிர் மற்றும் மெஹ்ரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket India Vs Pakistan Asia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment