கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கும் மத்தியில் விளையாட்டு உலகம் ரீ-ஸ்டார்ட் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட், ஃபுட்பால், டென்னிஸ், பேஸ்பால் என்று அனைத்து ரகங்களும், களத்தில் கால் பதிக்கத் தொடங்கிவிட்டன. ‘கொரோனாவுல வேலை போய் அவனவன் சோற்றுக்கே கஷ்டப்படுறான், இதுல ஸ்கோர் ஒரு கேடா?’ என்று ஆக்ரோஷப்பட்டாலும், மாதக்கணக்கிலான லாக் டவுன் கால டிப்ரஷனில் இருந்து சற்றேனும் மீள, விளையாட்டு அவசியமாகிறது. ஸோ, ஸ்கோரும் அவசியம் தான்.
பட், விளையாட்டுப் போட்டிகள் தொடங்கினாலும், மைதானங்களில் ரசிகர்கள் இல்லை. வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், அனைத்து வகை விளையாட்டுகளும் ரசிகர்கள் இன்றியே நடைபெறுகிறது.
நாவில் உறை அணிந்து அல்வா சாப்பிட்டால், இனிக்குமா என்ன? அப்படியொரு நிலைமை தான்.
I. AM. BACK. – மீண்டும் பாக்ஸிங் ரிங்கில் மைக் டைசன்! 2k கிட்ஸ் இப்டி கொஞ்சம் வாங்க
அரங்கில் அதிரும் ரசிகர்களின் கைத்தட்டல், விசில் சப்தமுமே விளையாட்டு வீரனை சார்ஜுடன் வைத்திருக்கும். அந்த சார்ஜ் இன்றி விளையாடுவது அவர்களுக்கும் சிரமம், வீட்டில் டிவியில் பார்க்கும் நமக்கும் சிரமம்.
இருப்பினும், இதில் சிறிதேனும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக, ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் பேஸ்பால் தொடரில், virtual fans-ஐ உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின், 2020 மேஜர் லீக் பேஸ்பால் சீசன் போட்டிகளின் எண்ணிக்கை COVID-19 காரணமாக குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமான 162 போட்டிகளுக்கு பதிலாக 60 போட்டிகளே நடத்தப்பட உள்ளது. ஜூலை 23 அன்று தொடங்கிய இத்தொடர், செப்டம்பர் 27 வரை நடைபெறுகிறது.
ரசிகர்களின்றி நடைபெறுவதாய் இருந்த இதுதொடரில், SportsMEDIA Technology மற்றும் Silver Spoon Animation உடன் இணைந்து virtual fans-ஐ உருவாக்கியுள்ளது ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். ஹாலில் அமர்ந்து டிவியில் போட்டிகளை பார்க்கும் போது, உண்மையிலேயே ரசிகர்கள் தான் அரங்கு முழுவதும் நிறைந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு தத்ரூபமாக வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் ரசிகர்களுக்கு செப்.19 முதல் ‘ஃபுல் மீல்ஸ்’ ரெடி! நவம்பர் 8 ஃபைனல்
கிட்டத்தட்ட 500 வகையான ஆக்ஷன்களை virtual fans வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் கத்துகிறார்கள், ஆர்ப்பரிக்கிறார்கள், விசில் ஊதுகிறார்கள், மெக்சிகன் வேவ் செய்கிறார்கள். நிஜ ரசிகர்களைப் போலவே இயங்குவது இதன் ஸ்பெஷல்.
இந்த சிஸ்டம் ரசிகர்களின் ஆதரவைப் பெறும் பட்சத்தில், கிரிக்கெட் தொடர்களுக்குக் கூட இந்த virtual fans செயல்முறை நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil