ENG vs AFG: இங்கிலாந்தை புரட்டி எடுத்த ஆப்கான்... வரலாறு படைத்து மிரட்டல்!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், இங்கிலாந்து அணி போராடி தோல்வி அடைந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ENG vs AFG Champions trophy 2025 8th match live score england vs afghanistan live cricket scorecard updates gaddafi stadium lahore Tamil News

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான், லைவ் கிரிக்கெட் ஸ்கோர், சாம்பியன்ஸ் டிராபி 2025

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8-வது லீக்கில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் புதன்கிழமை மோதியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: England vs Afghanistan LIVE Cricket Score, Champions Trophy 2025

டாஸ் வென்ற ஆப்கான் பேட்டிங் 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது. ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக  ரஹ்மானுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் சத்ரான் ஜோடி களமாடினர். அதிரடியான தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 6 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த  செடிகுல்லா அடல் 4 ரன்னுக்கும், அடுத்து வந்த ரஹ்மத் ஷா 4 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

Advertisment
Advertisements

அடுத்தடுத்த விக்கெட் இழப்பை சந்தித்த ஆப்கான் அணியை விக்கெட் சரிவில் இருந்து மீட்க தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் - கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி ஜோடி உதவினர். இவர்களின் சிறப்பான ஆட்டம் அணியை ஸ்கோரை உயர்த்த செய்தது. அதேநேரத்தில், இப்ராஹிம் சத்ரான் அரைசதம் அடித்து அசத்தினார். 

கிட்டத்தட்ட 20 ஓவர்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் எடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட  கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 40 ரன்னில் அவுட்  ஆனார். இதையடுத்து களம் புகுந்த அஸ்மதுல்லா உமர்சாய் உடன் ஜோடி  அமைத்தார் இப்ராஹிம் சத்ரான். 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டிய அஸ்மதுல்லா 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  

இதனிடையே, சதம் விளாசி அசத்தி இருந்தார் தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான். அவர் முகமது நபியுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இருவரும் இங்கிலாந்து அணிக்கு பெரும் குடைச்சல் கொடுத்தனர். அதிலும், இங்கிலாந்து பவுலர்களின் பவுலிங்கை நொறுக்கி அள்ளிய இப்ராஹிம் சத்ரான் 150 ரன் எடுத்து மிரட்டல் விடுத்தார். 

ஆப்கான் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்த இப்ராஹிம் சத்ரான் 146 பந்துகளில் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 177 ரன்கள் குவித்த நிலையில் 49.1-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரது இந்த சிறப்பான பேட்டிங்கிற்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இதேபோல், 24 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்ஸரை பறக்கவிட்டு  முகமது நபி 40 ரன்னுக்கு அவுட் ஆனார். 

இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் ஆப்கான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது.  இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டையும், லியாம் லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டையும், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இங்கிலாந்து பேட்டிங்  

ஆப்கான் அணிக்கு எதிராக 326 ரன்கள் கொண்ட வெற்றி  இலக்கை இங்கிலாந்து துரத்தி வருகிறது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - பென் டக்கெட் களமாடினார்கள். இதில் பிலிப் சால்ட் 12 ரன்னுக்கும், அடுத்து வந்த  ஜேமி ஸ்மித் 9 ரன்னுக்கும் ஆட்டமிழந்து  வெளியேறினர். 

4 பவுண்டரியை விரட்டிய தொடக்க வீரர் பென் டக்கெட் 38 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த  ஹாரி புரூக் 21 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து, கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் செய்ய வந்தார்.

அடித்து விளையாடிய ஜோச் பட்லர், 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஒமர்ஜாய் பந்தில், ரஹமத் ஷா இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, லையம் லிவிங்ஸ்டோன் பேட்டிங் செய்ய வந்தார். சிறப்பாக  விளையாடிய ஜோ ரூட் அரை சதம் அடித்தார். 

லையம் லிவிங்ஸ்டோன் 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து ஜமி ஒவெர்டான் பேட்டிங் செய்ய வந்தார். இதனிடையே சிறப்பாக விளையாடி ஜோ ரூட் சதம் அடித்தார்.

சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஓமர்ஜாய் பந்தில் ரஹ்மனுல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் பேட்டிங் செய்ய வந்தார். 

அடித்து ஆடிய ஜமி ஓவெர்டான், 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஒமர்ஜாய் பந்தில், முஹமது நபியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஆதில் ரஷித் பேட்டிங் செய்ய வந்தார்.

ஜோஃப்ரா ஆர்சர் 8 பந்துகளில் 14 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஃபரூக்கி பந்தில், முஹம்மது நபியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, மார்க் உட் பேட்டிங் செய்ய வந்தார்.

இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி போராடி தோல்வி அடைந்தது. 

இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், ரஷீத் கான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி

இங்கிலாந்து: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், மார்க் வுட். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் கடந்த புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: England vs Afghanistan LIVE Cricket Score, Champions Trophy 2025

முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் டிராபியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. வங்கதேசம் பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. 

England Afghanistan Champions Trophy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: