இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசிய நிலையில், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தரமான பந்துவீச்சு தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்காத இங்கிலாந்து அணியினர் அடுத்தடுத்த ஆட்டமிழந்து வெளியேறினர். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் வேட்டை நடத்தினார். ஷமி தனது பங்கிற்கு வேகத் தாக்குதல் தொடுத்து விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் இங்கிலாந்து அணி 110 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் மிரட்டி எடுத்த இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்களையும், ஷமி 3 விக்கெட்டுகளையும், பிரசித் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
BOOM BOOM 💥💥
Jasprit Bumrah has been at it from the word go and he registers his second 5-wicket haul in ODIs.
Live - https://t.co/8E3nGmlfYJ #ENGvIND pic.twitter.com/x9uKAuyFvS— BCCI (@BCCI) July 12, 2022
தொடர்ந்து 111 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக ரன்களை குவித்து வந்த கேப்டன் ரோகித் தனது 45வது அரைசதத்தை விளாசினார். இந்த ஜோடி தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், இங்கிலாந்து நிர்ணயித்த இலக்கை 18.4 வது ஓவரிலே எட்டிப்பிடிக்க உதவினர்.
இதனால், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாயசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர்களில் கேப்டன் ரோகித் 58 பந்துகளில் 5 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 76 ரன்களும், தவான் 54 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்தனர்.
A clinical performance from #TeamIndia to beat England by 10 wickets 👏👏
We go 1️⃣-0️⃣ up in the series 👌
Scorecard ▶️ https://t.co/8E3nGmlNOh #ENGvIND pic.twitter.com/zpdix7PmTf— BCCI (@BCCI) July 12, 2022
For his exemplary bowling display, @Jaspritbumrah93 bags the Player of the Match award as #TeamIndia beat England in the first #ENGvIND ODI. 🙌 🙌
Scorecard ▶️ https://t.co/8E3nGmlNOh pic.twitter.com/Ybj15xJIZh— BCCI (@BCCI) July 12, 2022
கேப்டன் ரோகித் சாதனை…
இந்த ஆட்டத்தில் 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவ்வகையில் அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸ்ர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்த அசத்தலான சாதனை மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் கேப்டன் ரோகித் சர்மா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி (351 சிக்ஸர்) முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிறிஸ் கெயில் (331 சிக்ஸர்) இரண்டாவது இடத்திலும், இலங்கையின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா (270 சிக்ஸர்) 3வது இடத்திலும் உள்ளனர்.
புதிய சாதனை படைத்த இந்திய வேகப்பந்து வீச்சு படை…
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில், அந்த அணியின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே (பும்ரா-6, ஷமி-3, பிரசித் கிருஷ்ணா-1) சாய்த்து அசத்தினர். இப்படி ஒரு நாள் கிரிக்கெட்டில் இன்னிங்சின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இது 7-வது முறையாகும்.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் முகமது ஷமியின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 151 ஆக (80 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் 150 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 10 இந்தியர்கள் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதில் சிறந்த பந்து வீச்சை கொண்டுள்ள ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்னுக்கு 6 விக்கெட் (வங்காளதேசத்துக்கு எதிராக 2014) கைப்பற்றி உள்ளார்.
அனில் கும்பிளே (6-12), பும்ரா (6-19), ஆஷிஷ் நெஹரா (6-23), குல்தீப் யாதவ் (6-25), முரளிகார்த்திக் (6-27), அஜித் அகர்கர் (6-42), யுஸ்வேந்திர சாஹல் (6-42), அமித் மிஸ்ரா (6-48), ஸ்ரீசாந்த் (6-55), ஆஷிஷ் நெஹரா (6-59) ஆகியோர் 6 விக்கெட் வீழ்த்திய மற்ற இந்தியர்கள் ஆவர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.