Advertisment

அகமதாபாத் உலகக் கோப்பை போட்டி: 40 ஆயிரம் பெண்களுக்கு இலவச டிக்கெட், கூப்பன்கள் வழங்கல்

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தை நேரில் பார்க்க சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பெண்களுக்கு இலவச டிக்கெட் மற்றும் உணவு கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Oct 05, 2023 10:12 IST
New Update
ENG vs NZ Cricket World Cup Free tickets and coupons offer women to pack stands Tamil News

பா.ஜ.க நகர வார்டு அளவிலான தொடர்புகள் மூலம் உள்ளூர் தலைவர்கள் இலவச டிக்கெட் விநியோகம், தேநீர் மற்றும் மதிய உணவுக்கான கூப்பன்களை உறுதிசெய்து கொண்டனர்.

Ahmedabad | worldcup 2023 | ENG vs NZ 1st Match Narendra Modi Stadium Tamil News: 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கோலாகலமாக அரங்கேறுகிறது. இன்று மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில், இந்த தொடக்க ஆட்டத்தை நேரில் பார்க்க அகமதாபாத் முழுவதிலும் இருந்து 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பெண்கள் வரவழைக்கப்பட உள்ளார்கள். அவர்களுக்கு இலவச டிக்கெட் மற்றும் உணவு கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

Advertisment

பா.ஜ.க நகர வார்டு அளவிலான தொடர்புகள் மூலம் உள்ளூர் தலைவர்கள் இலவச டிக்கெட் விநியோகம், தேநீர் மற்றும் மதிய உணவுக்கான கூப்பன்களை உறுதிசெய்து கொண்டனர். போடாக்தேவ் பகுதியின் பா.ஜ.க துணைத் தலைவர் லலித் வாத்வான், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் பெண்களை மைதானத்திற்கு அழைத்து வர வேண்டும் என்ற எண்ணம் தூண்டப்பட்டது என்றார்.

"அகமதாபாத்தைச் சேர்ந்த சுமார் 30,000 முதல் 40,000 பெண்கள் இன்று மைதானத்தில் விளையாட்டைப் பார்ப்பார்கள். எங்கள் தொண்டர்கள் பெயர்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு, டிக்கெட்டுகள் இன்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை எங்களுக்கு மேலிடம் வழங்கியது. 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கூட நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பெண்கள் தாங்களாகவே ஸ்டேடியத்தை அடைவார்கள், அவர்களுக்கு தேநீர் மற்றும் உணவு கூப்பன்கள் வழங்கப்படும்" என்று வாத்வான் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

தொடக்கப் போட்டிக்கு பெண்களைத் திரட்ட அக்கட்சி சிறப்பான முயற்சியை மேற்கொண்டதா? என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் யமல் வியாஸ், “அப்படி எதற்கும் கட்சி அளவில் நாங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்கள் (பெண்கள்) அதிக அளவில் சென்றால் பரவாயில்லை. ஆனால், அதற்காக எந்த ஒரு சிறப்பான முயற்சியையும் கட்சி மேற்கொள்வதில்லை” என்று பதிலளித்தார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Cricket World Cup: Free tickets & coupons on offer, women to pack stands today for World Cup opener

பா.ஜ.க வார்டு உறுப்பினர்கள், சமூகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அவர்களின் பூத் பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் பெயர்களை பட்டியலிடுமாறு வாட்ஸ்அப் செய்தியின் மூலம் பா.ஜ.க வார்டு உறுப்பினர்கள் தங்கள் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இதன்மூலம் வெகுஜன அணிதிரட்டல் செயல்முறை இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கியது. பெண்களின் பெயர்கள் மற்றும் கைபேசி எண்களை ஒதுக்கப்பட்ட உள்ளூர் தலைவருக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

“பாஸ்கள் பெண்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், அவர்களுக்கு டீக்கு இரண்டு டோக்கன்கள், காலை உணவுக்கு ஒன்று மற்றும் உணவு பாக்கெட்டுக்கு ஒன்று வழங்கப்படும். திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் தொண்டர்கள் அனைத்து பெயர்களையும் அனுப்பியுள்ளனர், ”என்று உள்ளூர் தலைவர்கள் தெரிவித்தனர். 

குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் (ஜிசிஏ) மூத்த கிரிக்கெட் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மற்ற இடங்களில், பள்ளி மாணவர்கள் விளையாட்டைப் பார்க்க அழைக்கப்படுகிறார்கள், ஏனெனில் இது மைதானத்தை நிரப்புகிறது மற்றும் சூழ்நிலையை உருவாக்குகிறது. இங்குள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஸ்டாண்டில் பெண்கள் இருப்பார்கள், ”என்று அவர் கூறினார். 

டிக்கெட்டுகளை யார் யார் பயன்படுத்துகிறார்கள் மற்றும் அதற்கு பணம் செலுத்தியவர்கள் யார்? என்று கேட்டதற்கு, அதிகாரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். சுமார் 1.3 லட்சம் பார்வையாளர்கள் அமரும் இருக்கையை கொண்ட  உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Ahmedabad #Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment