England vs New zealand cricket world cup 2019 final match scorecard and updates: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், இயன் மோர்கன் தலைமையிலானஆஸ்திரேலிய அணியும் மோதின.
இதில், முதலில் ஆடிய நியூசிலாந்து, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தும், 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.
பிறகு கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில், முதலில் ஆடிய இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, சேஸிங் செய்த நியூசிலாந்தும் 15 ரன்கள் எடுத்ததால், இந்தப் போட்டியில் அதிகம் பவுண்டரிகள் அடிக்கப்பட்டதன் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
England vs New zealand cricket world cup 2019 final
ENG vs NZ world cup 2019 final: இறுதிப் போட்டி அப்டேட்
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்தியாவுக்கு எதிராக அரையிறுதியில் ஆடிய அதே நியூஸி., அணியே இறுதிப் போட்டியிலும் களமிறங்கியுள்ளது. 5 ஓவர்கள் முடிவில், அந்த அணி 24-0.
முதல் 10 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்திருக்கிறது. க்றிஸ் வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆன மார்ட்டின் கப்தில், ரிவியூ எடுத்தும் பலனின்றி அவுட்டாகி வெளியேறினார். கப்தில் அவுட்டான பிறகு கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கியுள்ளார்.
18 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. நிகோலஸ் 35 ரன்களுடனும், வில்லியம்சன் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து இதேபோன்று பொறுமையாக ஆடினாலும், விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டாலே, அது அவர்களுக்கு நிச்சயம் சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரேயொரு விக்கெட்டுடன் 100 ரன்களைக் கடந்து சீராக சென்றுக் கொண்டிருந்த நியூசிலாந்து அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் 30 ரன்னிலும், அரைசதம் அடித்த நிகோலஸ் 55 ரன்னிலும் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையுமே லியம் பிளங்கட் தான் கைப்பற்றினார். இதனால், நியூசிலாந்தின் ரன் ரேட் வெகுவாக பாதித்தது.
பிறகு, ஆகாத எல்பிக்கு அவுட் கொடுத்து சீனியர் வீரர் ராஸ் டெய்லர் 15 ரன்களில் வெளியேற்றப்பட, நியூசிலாந்து மிகவும் சிக்கலான நிலையில் சிக்கியுள்ளது. டாம் லாதமும், ஜிம்மி நீஷமும் ஓரளவுக்கு டீசன்ட்டான ஸ்கோரை நிர்ணயிக்க போராடி வருகின்றனர்.
இறுதிக் கட்டத்தில் போராடிய நியூசிலாந்து லோ ஆர்டர் பேட்ஸ்மேன்கள், அப்படி இப்படி என தட்டுத் தடுமாறி ரன்களைச் சேர்க்க, முடிவில் நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 47 ரன்களை சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில், வோக்ஸ், பிளங்கட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்திலேயே ஜேசன் ராய் விக்கெட்டை பறிகொடுத்தது. மேட் ஹென்றி ஓவரில், 17 ரன்களில் அவர் கீப்பர் கேட்ச் ஆனார். அதன்பிறகு இங்கிலாந்தின் ரன் ரேட் மிகவும் குறைந்தது.
தொடர்ந்து, ஜோ ரூட் 7 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ 36 ரன்களிலும், மோர்கன் 9 ரன்னிலும் வெளியேற, இங்கிலாந்து டாப் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பிறகு, லோ ஆர்டரில் களமிறங்கிய ஜோஸ் பட்லர் - பென் ஸ்டோக்ஸ் இணை மிக அபாரமாக அணியை மீட்டது. இருவரும் அரைசதம் அடிக்க, இங்கிலாந்து மெல்ல மெல்ல இலக்கை நெருங்கியது. ஜோஸ் பட்லர் 59 ரன்களில் அவுட்டாக, பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
இறுதி ஓவரில், இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரில் பென் ஸ்டோக்ஸ் 14 ரன்கள் எடுத்தார். இதனால், ஆட்டம் டிராவானது.
பிறகு கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில், முதலில் ஆடிய இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, சேஸிங் செய்த நியூசிலாந்தும் 15 ரன்கள் எடுத்ததால், இந்தப் போட்டியில் அதிகம் பவுண்டரிகள் அடிக்கப்பட்டதன் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.