பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. இந்த தொடருக்காக இங்கிலாந்து வீரர்கள் நவம்பர் 27 அன்று இஸ்லமாபாத் வந்தடைந்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 1 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 9ஆம் தேதி முலதானிலும், கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி கராச்சியிலும் நடைபெற உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டில் தான் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதனால், இரு நாட்டு ரசிகர்களும் ஆர்வகமாக உள்ளனர்.
இங்கிலாந்து வீரர்களுக்கு வைரஸ் நோய் பாதிப்பு
இந்நிலையில், இங்கிலாந்து அணியில் உள்ள பணியாளர்கள் உட்பட 14 பேருக்கு வைரஸ் நோய் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். இதனால், பாகிஸ்தானில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த நோய் கொரோனா தொடர்பானவை அல்ல என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய (ECB) செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், வீரர்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை அனுபவிக்கின்றனர் என்றும், முதல் ஆட்டற்கு இன்னும் 24 மணி நேரம் உள்ள நிலையில், அதற்குள் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டைத் தவிர, ஆடும் லெவனில் பெயரிடப்பட்ட ஜாக் க்ராலி, ஒல்லி போப் மற்றும் ஹாரி ப்ரூக் மற்றும் கீட்டன் ஜென்னிங்ஸ் ஆகியோர் மட்டுமே இன்று மைதானத்தில் பயிற்சி பெற்றனர்.
BREAKING:
— Test Match Special (@bbctms) November 30, 2022
14 members of England’s touring party including captain @benstokes38 are unwell as a virus sweeps through the camp.
Only Harry Brook, Zak Crawley, Keaton Jennings, Ollie Pope and Joe Root are at the ground ahead of the Test tomorrow. #bbccricket #PAKvENG pic.twitter.com/pw0yLSxRes
ஜோ ரூட் செய்தியாளர்கள் சந்திப்பு
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்சுக்கும் வைரஸ் நோய் பாதித்துள்ள நிலையில், அவர் நாளை நடக்கும் போட்டியில் விளையாடுவாரா? என்பதில் கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், ராவல்பிண்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரூட், பல வீரர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அணி நிர்வாகம் முன்னேறும் வழியில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
“(மார்கஸ்) ட்ரெஸ்கோதிக், (ராப்) கீ மற்றும் (பிரெண்டன்) மெக்கல்லம் தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் காலையில் நன்றாக இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நான் நேற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். ஆனால் இன்று நன்றாக எழுந்தேன்.” என்று கூறியுள்ளார்.
ஸ்டோக்ஸ் லோ-ஆடரில் களமாடும் வீரர்களில் ஒருவர் என்பதால், ரூட்டிற்கு அடுத்தவர் இல்லாத நிலையில் அவர் அணியை வழிநடத்துவாரா என்று கேட்கப்பட்டது. ஆனால், முன்னாள் கேப்டன் ஜோ ரூட் அதை உடனடியாக மறுத்தார். கேப்டனாக ஒல்லி போப்பாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
“நான் அப்படி நினைக்கவில்லை. ஒல்லி போப் வார்ம்-அப்பில் அந்த வேலையைச் செய்தார். மேலும் அருமையான வேலையைச் அவர் செய்வார்” என்று ரூட் மேலும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil