Advertisment

ENG vs WI Highlights: அதிரடி காட்டிய பிலிப் சால்ட், ஜானி பேர்ஸ்டோவ்... வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து!

டி20 உலக கோப்பை தொடர் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்காவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

author-image
WebDesk
New Update
ENG vs WI 2024 T20 World Cup 2024 England vs West Indies today Match 42 Super 8 Group 2  Live Cricket Score updates in tamil

அமெரிக்காவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 T20 World Cup 2024 | West Indies vs England: டி20 உலக கோப்பை தொடர் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்காவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

Advertisment

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்ற 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. 

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் லீக் சுற்றுடன் வீட்டு நடையைக் கட்டின

சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், குரூப் 2-ல் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் வருகிற 29 ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மல்லுக்கட்டும்

சூப்பர் 8 சுற்று தொடக்கம் 

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தி வரும் நிலையில், லீக் ஆட்டங்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சூப்பர் 8 சுற்றில் இருந்து இனி எல்லா ஆட்டங்களும் வெஸ்ட் இண்டீசில் மட்டுமே நடைபெற உள்ளது. 

இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) முதல் தொடங்கும் சூப்பர் 8 சுற்றில் முதல் நாளில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆன்டிகுவாவில் உள்ள சர்விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா - மோனக் பட்டேல் தலைமையிலான அமெரிக்கா அணிகள் மோதின. இதில்  தென் ஆப்பிரிக்கா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதே நாளில் வெஸ்ட் இண்டீஸ் - நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இடையிலான ஆட்டம் செயின்ட் லூசியாவில் உள்ளூர் நேரப்படி இரவில் தொடங்குகிறது. ஆனால் இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கி நடைப்பெற்றது. 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 180 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சார்லஸ் 38 ரன்கள் அடித்தார். இதனைத் தொடர்ந்து, 181 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரரான பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி 13 ரன்களில் அவுட் ஆகினார். 

பின்னர் வந்த பிலிப் சால்ட் - பேர்ஸ்டோவ் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இதனால், இலக்கை நோக்கி விறுவிறுவென முன்னேறிய இங்கிலாந்து வெறும் 17.3 ஓவர்களிலேயே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 87 ரன்களும், பேர்ஸ்டோவ் 48 ரன்களும் அடித்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரசல் மற்றும் சேஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

West Indies England T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment