Advertisment

டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 பந்துகளில் அரைசதம் அடித்த இங்கிலாந்து; புதிய சாதனை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 26 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்த இங்கிலாந்து அணி; டெஸ்ட் கிரிக்கெட்டில் முந்தைய சாதனை முறியடிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ben ducket

பென் டக்கெட்டின் தாக்குதலால் இங்கிலாந்து அணி அதிவேக அரைசதத்தை பதிவு செய்தது. (ராய்ட்டர்ஸ்)

இங்கிலாந்து அணி பேஸ்பால் முறைக்கு திரும்பி, வியாழன் அன்று நாட்டிங்ஹாமில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது அதிவேக அரைசதம் அடித்த அணிக்கான டெஸ்ட் சாதனையை முறியடித்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 26 பந்துகளில் (4.2) 50 ரன்களை எட்டியது, 1994 ஆம் ஆண்டு ஓவலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து 27 பந்துகளில் அரைசதம் அடித்த முந்தைய சாதனையை இன்று இங்கிலாந்து மீண்டும் முறியடித்தது.

முதல் ஓவரில் மூன்று பந்தில் டக் ஆக சாக் கிராலி ஆட்டமிழந்த போதிலும், இடது கை தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் ஆகியோர் விரைவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருவரும் 10 பவுண்டரிகளை விளாசி சாதனை படைத்தனர்.

பென் டக்கெட் 32 பந்துகளில் தனது அரைசதத்தை விரைவுபடுத்தி, இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரரின் வேகமான டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார். முதல் ஒரு மணி நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது. 1994 ஆம் ஆண்டு ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து அணி விரைவான சதத்தை பதிவு செய்தது, அங்கு இங்கிலாந்து அணி 205 ரன்களை சேஸ் செய்த நான்காவது இன்னிங்ஸில் 13.3 ஓவர்களில் சதத்தை எட்டியது.

2023 இல் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 12.2 ஓவர்களில் மைல்கல்லை எட்டிய இந்திய அணி ஒட்டுமொத்தமாக 100 ரன்களைக் குவித்த சாதனையை படைத்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையில் மற்றும் 'பேஸ்பால்' தாக்குதல் தத்துவத்தின் கீழ், இங்கிலாந்து அணி 2022 ஆம் ஆண்டு முதல், ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் ரன்-ரேட்டுடன் ஆறு டெஸ்ட் இன்னிங்ஸை பதிவு செய்துள்ளது - இது டெஸ்ட் வரலாற்றில் அனைத்து அணிகளிலும் அதிகம் ஆகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 50களை பதிவு செய்த அணிகள்

4.2 – இங்கிலாந்து எதிர் வெஸ்ட் இண்டீஸ், நாட்டிங்ஹாம், 2024

4.3 – இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா, தி ஓவல், 1994

4.6 – இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா, மான்செஸ்டர், 2002

5.2 – இலங்கை எதிர் பாகிஸ்தான், கராச்சி, 2004

5.3 – இந்தியா எதிர் இங்கிலாந்து, சென்னை, 2008

5.3 – இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ், போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2023

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Cricket England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment