/tamil-ie/media/media_files/uploads/2018/06/s542.jpg)
England ODI squad announces
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
We have named our squad to face India in the three-match Royal London ODI series:
➡ https://t.co/g2T2nXQ4Qhpic.twitter.com/DEGf6CcBRT
— England Cricket (@englandcricket) June 29, 2018
மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. முதலாவதாக, வரும் ஜூலை 3ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டிகள் தொடங்குகிறது. இந்நிலையில், ஜூலை 12ம் தேதி தொடங்கும் ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:
இயான் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜேக் பால், அலெக்ஸ் ஹேல்ஸ், டாம் குர்ரன், லயம் பிளங்கட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், டேவிட் வில்லே, மார்க் வுட்.
இயான் மோர்கன் தலைமையிலான 14 பேர் கொண்ட அணியில், தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் விளையாடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்த ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்படவில்லை.
உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை ஒருநாள், டி20 என தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் அலற விட்ட இங்கிலாந்து, பென் ஸ்டோக்ஸ் வருகையால் மேலும் பலம் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், தென்னாப்பிரிக்க அணியை அதன் மண்ணிலேயே வைத்து ஒருநாள், டி20 தொடர்களில் வீழ்த்தி கைப்பற்றிய இந்திய அணி, இங்கிலாந்திடமும் அதே வீரியத்தை காட்டும் என நம்பலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.