பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) உள்ளிட்ட ஃபிரான்சைஸ் லீக் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று இங்கிலாந்து ஊடகமான தி டெலிகிராப் தெரிவித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டின் தரத்தை மேம்படுத்த இங்கிலாந்து வாரியம் விரும்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் அறிக்கையில், இங்கிலாந்தில் நடைபெறும் உள்நாட்டுப் போட்டியின் போது மற்ற எந்த ஃபிரான்சைஸ் லீக்குகள் நடைபெற்றாலும், அந்தப் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆட்சேபனை சான்றிதழை (என்.ஓ.சி) வழங்காது என்று கூறப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் முதல் மே வரை விளையாடத் திட்டமிடப்பட்டுள்ள பி.எஸ்.எல் போட்டியில் சில முன்னணி இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, இங்கிலாந்து வாரியத்துடனான ஒப்பந்தங்களை ரத்து செய்த வீரர்கள், ஃபிரான்சைஸ் லீக்குகளில் ஆடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், முதல் தர போட்டிகளில் பங்கேற்க வீரர்களுக்கு கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படாது என்றும், ஒயிட்-பால் ஒப்பந்தங்களை கொண்ட வீரர்கள் உள்நாட்டு ஒயிட்-பால் போட்டிகள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
டி20 ப்ளாஸ்ட் மற்றும் தி ஹண்ட்ரட் போன்ற உள்நாட்டு லீக்குகளின் போது வீரர்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில், தங்கள் அணி நாக் அவுட் செய்யப்பட்டவுடன், வீரர்கள் ஒரு லீக்கில் இருந்து மற்றொன்றுக்குத் தாவுவதை நிறுத்துவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும், ஊழல், சூதாட்டம் நடக்கும் லீக்குகளில் வீரர்கள் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் பேசுகையில், "எங்கள் விளையாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள எங்கள் போட்டிகளின் வலிமையை நாங்கள் பாதுகாக்க வேண்டும். இந்தக் கொள்கையானது, தடையில்லாச் சான்றிதழை வழங்குவதற்கான எங்கள் அணுகுமுறையைச் சுற்றி வீரர்கள் மற்றும் தொழில்முறை மாவட்டங்களுக்கு தெளிவுபடுத்துகிறது.
சம்பாதிப்பதற்கும் அனுபவத்தைப் பெறுவதற்கும் வாய்ப்புகளைப் பெற விரும்பும் ஆதரவாளர்களுக்கு இடையே சரியான சமநிலையை அடைய இது உதவுகிறது. அதே நேரத்தில் உலகளவில் கிரிக்கெட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறது, எங்கள் சொந்த வாரியத்தில் போட்டிகளை நாங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்கிறோம். மேலும் ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர்களின் நலனை நிர்வகிப்போம்." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.