/indian-express-tamil/media/media_files/QGAwHtDgWMd7xhWyUpaD.jpg)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 15ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
India vs England, 3rd Test:பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 15ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு 3வது டெஸ்ட் போட்டிக்கு 2 வாரங்கள் இருந்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி விடுமுறையை கழிக்க ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபிக்கு சென்றனர். அபுதாபியில் 10 நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு இங்கிலாந்து அணி நேற்று இந்தியா திரும்பியது. அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இங்கிலாந்து வீரர்கள் ராஜ்கோட் வந்தனர்.
அப்போது இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீரர் ரெஹான் அகமது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். விசா பிரச்சினையால் அவரிடம் விமான நிலையத்தின் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ரெஹான் அகமது ஒற்றை நுழைவு விசா மட்டுமே வைத்திருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் ஏற்கனவே இந்தியா வந்து சென்றிருந்தார்.
/indian-express-tamil/media/post_attachments/71a0efdb-476.jpg)
ரெஹான் அகமது தற்போது 10 தினங்களுக்குள் மீண்டும் இந்தியா வந்ததால் விசா பிரச்சினையில் விசாரிக்கப்பட்டார். நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உள்ளூர் அதிகாரிகள் அவருக்கு 2 நாள் விசா வழங்கியுள்ளார்கள்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ஒருவர் பேசுகையில், அடுத்த 2 தினங்களுக்குள் விசாவை மீண்டும் செயல்படுத்த இங்கிலாந்து அணிக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரெஹான் அகமது மற்ற வீரர்களுடன் நுழைய அனுமதிக்கப்பட்டார். அவர் செவ்வாய்க்கிழமை நடக்கும் பயிற்சியில் கலந்து கொள்வார்." என்று கூறினார்.
ஏற்கனவே இங்கிலாந்தை சேர்ந்த சோயிப் பஷீர் விசா பிரச்சினையில் சிக்கி இருந்தார். இதனால் அவரால் முதல் போட்டியில் விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us