Advertisment

AFG vs ENG Live Score : கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்; வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

ENG vs AFG Live Score, World Cup 2023: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 13 போட்டி ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

author-image
WebDesk
Oct 15, 2023 21:47 IST
New Update
AFG VS ENG

AFG vs ENG Live Score

England vs Afghanistan World Cup 2023 Live Score: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 13 போட்டி ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில், ஆஃப்கானிஸ்தான் அணி 69 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

Advertisment

ஆஃப்கானிஸ்தான் vs இங்கிலாந்து லைவ் ஸ்கோர் தெரிந்துகொள்ள: England vs Afghanistan Live Score, World Cup 2023:

50 ஓவர் ஒரு நாள் போட்டிக்கான 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான்  மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

ஆஃப்கானிஸ்தான்  மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி, ஆஃப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாத்ரான் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக அடித்து விளையாடினார்கள். இந்த ஜோடியைப் பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் போராட வேண்டியிருந்தது. 

ஆஃப்கானிஸ்தான் 16.04 ஓவரில் 114 ரன் எடுத்திருந்தபோது, அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து 57 பந்துகளில் 80 ரன் எடுத்திருந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். அடுத்து, ரஹ்மத் ஷா பேட்டிங் செய்ய வந்தார். 

ஆஃப்கானிஸ்தான் 18.04 ஓவரில் 122 ரன் எடுத்திருந்தபோது ரஹ்மத் ஷா 3 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ஹஷ்மதுல்லா ஷாஹிதி பேட்டிங் செய்ய வந்தார். 

அடுத்த பந்தில், மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த இப்ராஹிம் ஜாத்ரான் 28 ரன் எடுத்திருந்த நிலையில், அடில் ரஷித் பந்தில் ஜோஸ் பட்லரால் ஸ்டம்பிக் செய்யப்பட்டு அவுட் ஆனார். இவரையடுத்து, அஜ்மதுல்லா ஒமர்ஜாய் பேட்டிங் செய்ய வந்தார்.

ஆஃப்கானிஸ்தான் அணி 25.6 ஓவரில் 152 ரன் எடுத்திருந்தபோது, அஜ்மதுல்லா ஒமர்ஜாய் 19 ரன் எடுத்திருந்த நிலையில், லயம் லிவிங்ஸ்டோன் பந்தில் கிறிஸ் வாக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  விளையாடி வருகிறது. இவரையடுத்து, ஐக்ரம் அலிகில் பேட்டிங் செய்ய வந்தார்.

ஆஃப்கானிஸ்தான் அணி 32.01 ஓவரில் 174 ரன் எடுத்திருந்தபோது, 36 பந்துகளில் 14 ரன் மட்டுமே எடுத்திருந்த ஹஷ்மதுல்லா ஷாஹிதி ஜோர் ரூட் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இவரை அடுத்து, முஹமது நபி பேட்டிங் செய்ய வந்தார். அவரும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து மார்க் வுட் பந்த்ல் ஜோ ரூட்டிடம் கேட் கொடுத்து அவுட் ஆனர். இவரை அடுத்து, ரஷித் கான் பேட்டிங் செய்ய வந்துள்ளார். 

ஆஃப்கானிஸ்தான் அணி 44.01 ஓவரில் 233 ரன் எடுத்திருந்தபோது, 22 பந்துகளில் 23 ரன் எடுத்திருந்த ரஷித் கான் அடில் ரஷித் பந்தில் ஜோ ரூட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரை அடுத்து பேட்டிங் செய்ய வந்த முஜீப் உர் ரஹ்மான் அதிரடியாக விளையாடினார். 

ஆஃப்கானிஸ்தான் அணி 47.06 ஓவரில் 277 ரன் எடுத்திருந்தபோது, சிறப்பாக விளயாடி வந்த ஐக்ரம் அலிகில் 66 பந்தில் 66 ரன் எடுத்திருந்த நிலையில், ரீஸ் டோப்ளே பந்தில் சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  இவரை அடுத்து, நவீன் உல் அக் பேட்டிங் செய்ய வந்தார். 

ஆஃப்கானிஸ்தான் அணி 48.01 ஓவரில் 277 ரன் எடுத்திருந்தபோது,  முஜீப் உர் ரஹ்மான் 16 பந்துகளில் 28  ரன் எடுத்திருந்த நிலையில் மார்க் வுட் ஜோ ரூட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

இறுதியில், ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் 284 ரன் எடுத்திருந்தபோது, நவீன் உல் ஹக் ரன் அவுட் ஆனார். இதன் மூலம், ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன் எடுத்தது. 

285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் ஜோனி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மாலன் தொடக்க ஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர். 2-வது ஓவரிலேயே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 2 ரன் மட்டுமே எடுத்திருந்த பேர்ஸ்டோ ஃபரூக்கி வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். இவரை அடுத்து, ஜோ ரூட் பேட்டிங் செய்ய வந்தார்.

இங்கிலாந்து அணி 6.5 ஓவரில் 33 ரன் எடுத்திருந்தபோது, ஜோ ரூட்  11 ரன் எடுத்திருந்த நிலையில், முஜீப் உர் ரஹ்மான் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இவரையடுத்து, வந்த ஹாரி புரூக் டேவிட் மாலன் உடன் ஜோடி சேர்ந்தார்.

இங்கிலாந்து அணி 17.2  ஓவரில் 68 ரன் எடுத்திருந்தபோது,  11 ரன் எடுட்திருந்த ஜோ ரூட் முஜிப் உர் ரஹ்மான் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இவரைடுத்து, ஜோஸ் பட்லர் பேட்டிங் செய்ய வந்தார். 

மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த டேவிட் மாலன் 39 பந்துகளில் 32 ரன் எடுத்து மொஹமது நபி பந்தில் இப்ராஹிம் ஜாத்ரானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து, ஜோஸ் பட்லர் 9 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், நவீன் உல் ஹக் பந்தில் போல்ட் அவுட் ஆகி நடையைக் கட்டினார். அடுத்து, லயம் லிவிங்ஸ்டோன் பேட்டிங் செய்ய வந்தார். 

இங்கிலாந்து அணி 20.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்திருந்தபோது, 10 ரன் மட்டுமே எடுத்திருந்த லயம் லிவிங்ஸ்டோன், ரஷித் கான் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆனார். 

இவரையடுத்து, சாம் கரண் பேட்டிங் செய்ய வந்தார். நிதானமாக விளையாடி சாம் கரண் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முஹமது நபி பந்தில் ரஹ்மத் ஷா இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

இவரையடுத்து, கிறிஸ் வாக்ஸ் பேட்டிங் செய்ய வந்தார். கிறிஸ் வாக்ஸ் 9 ரன் மட்டுமே எடுத்து, முஜீப் உர் ரஹ்மான் பந்தில் அவுட் ஆகி வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார்.

அடுத்து அடில் ரஷித் பெட்டிங் செய்ய வந்தார். இவர் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரஷித் கான் பந்தில் முஹம்மது நபியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி  40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. 

இதன் மூலம், ஆஃப்கானிஸ்தான் அணி 69 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆஃப்கானிஸ்தான் அணியில் முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளையும் முஹம்மது நபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ள அணியாக கருதப்படும் இங்கிலாந்தை இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஜெயித்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக இது ஆப்கானிஸ்தானுக்கு இரண்டாவது வெற்றி. இந்த உலகக் கோப்பை தொடரில் சித்தர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக வெளியான முதல் அதிர்ச்சி முடிவு இந்த ஆட்டம் தான்.

ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜாத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிதி, முஹமது நபி, ஐக்ரம் அலிகில், அஜ்மதுல்லா ஒமர்ஜாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹல் ஃபரூக்கி, நவீன் உல் ஹக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர், லையம் லிவிங்ஸ்டன், கிறிஸ் வாக்ஸ், சாம் கரண், அடில் ரஷித், மார்க் வுட், ரீஸ் டோப்ளே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#afg vs eng
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment