worldcup 2023 | england-vs-australia: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் 36வது லீக் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: England vs Australia Live Score, World Cup 2023
டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்; ஆஸி., முதலில் பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் ஜோடி களமிறங்கினர். இதில் தலா ஒரு பவுண்டரியை விரட்டிய ஹெட் 11 ரன்னுக்கும், வார்னர் 15 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக 15 ஓவர்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை அமைத்த ஸ்டீவன் ஸ்மித் - மார்னஸ் லாபுசாக்னே ஜோடியில், 3 பவுண்டரிகளை விரட்டிய ஸ்மித் 44 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் 3 ரன்னில் அவுட் ஆனார்.
தற்போது மார்னஸ் லாபுசாக்னே - கேமரூன் கிரீன் ஜோடி களத்தில் விளையாடி வருகிறார்கள். ஆஸ்திரேலிய அணி 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே அரை சதம் அடித்தார். லபுசாக்னே- கிரீன் ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில், லபுசாக்னே 71 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டாய்னிஸ் களமிறங்கி அதிரடியாக ஆடினார். மறுமுனையில் ஆடிவந்த கிரீன் 47 ரன்களில் போல்டானார்.
அடுத்து கம்மின்ஸ் களமிறங்கிய சிறிது நேரத்தில், 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் விளாசிய கிரீன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டார்க் களமிறங்கினார். மறுமுனையில் ஆடிய கம்மின்ஸ் 10 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கி ஜாம்பா பவுண்டரிகளாக விளாசினார். இருப்பினும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹேசல்வுட் களமிறங்கி 1 ரன் எடுத்த நிலையில், ஸ்டார்க் 10 ரன்களில் அவுட் ஆனார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 4 விக்கெட்களையும், வுட் மற்றும் ரஷித் தலா 2 விக்கெட்களையும், வில்லி மற்றும் லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து பேட்டிங்
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பேர்ஸ்டோ மற்றும் மாலன் களமிறங்கினர். பேர்ஸ்டோ முதல் பந்திலே அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 13 ரன்களில் வெளியேறினார். இருவரும் ஸ்டார்க் பந்தில் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.
அடுத்து மாலன் உடன் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய மாலன் அரைசதம் அடித்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பட்லர் 1 ரன்னில் வெளியேறினார்.
மொயீன் அலி தொடக்கம் முதலே சற்று அதிரடி காட்டினார். இதற்கிடையில் அரைசதம் கடந்த ஸ்டோக்ஸ் 64 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 2 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து அணி 37 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக வோக்ஸ் – வில்லி ஜோடி சிறிது நேரம் தாக்குபிடித்தது. வில்லி 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த ரஷித் களமிறங்கிய நிலையில், வோக்ஸ் 32 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து மார்க் வுட் களமிறங்கினார். மறுமுனையில் ஆடிய ரஷித் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து இங்கிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 10 விக்கெட்களையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் ஜாம்பா 3 விக்கெட்களையும், ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்களையும், ஸ்டாய்னிஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த தோல்வியுடன் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 6 தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும் அரையிறுதி வாய்ப்பையும் இழந்துள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
நடப்பு உலகக் கோப்பை தொடரில் 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ள ஆஸ்திரேலியா இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ளும் முனைப்புடன் களமிறங்கும். அதேவேளையில் 6 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இங்கிலாந்து தனது 2வது வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.