worldcup 2023 | england vs netharlands: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் இன்று (புதன்கிழமை) புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கும் 40-வது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: England vs Netherlands Live Score, Cricket World Cup 2023
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் - நெதர்லாந்து பவுலிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மலான் ஜோடி களமிறங்கினர். இதில், 2 பவுண்டரிகளை விரட்டிய ஜானி பேர்ஸ்டோவ் 15 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் டேவிட் மலான் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். 74 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 87 ரன்கள் எடுத்த நிலையில், ரன்-அவுட் ஆகி வெளியேறினார். அவருடன் ஜோடியில் இருந்த ஜோ ரூட் 28 ரன்களுக்கு அவுட் ஆனார்.
அடுத்து வந்த வீரர்களில் ஹாரி புரூக் 11 ரன்னுக்கும், கேப்டன் ஜோஸ் பட்லர் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின்னர், களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோடி சேர்ந்த மொயீன் அலி 4 ரன்னில் அவுட் ஆனார்.
இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். பென் ஸ்டோக்ஸ் அரை சதம் அடித்ததைத் தொடர்ந்து, கிறிஸ் வோக்ஸ் அரை சதம் அடித்தார்.
இங்கிலாந்து அணி 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன் எடுத்திருந்தபோது, அரைசதம் அடித்திருந்த கிறிஸ் வோக்ஸ் 45 பந்தில் 51 எடுத்திருந்த நிலையில், பாஸ் டீ லீட் பந்தில் ஸ்காட் எட்வர்ட்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, டேவிட் வில்லே பேட்டிங் செய்ய வந்தார்.
டேவிட் வில்லே 2 பந்துகளை மட்டுமே சந்தித்து 6 ரன் எடுத்த நிலையில், பாஸ் டீ லீட் பந்தில் எங்கெல்பெர்க்ட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கஸ் அட்கின்சன் பேட்டிங் செய்ய வந்தார்.
மறுமுனையில் அதிரடி வானவேடிக்கை நிகழ்த்திய பென் ஸ்டோக்ஸ் 80 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஆனால், விரைவிலேயே லோகன் வேன் பீக் பந்தில் எங்கெல்பெர்க்ட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இவரை அடுத்து, அடில் ரஷித் பேட்டிங் செய்ய வந்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்தது. இதன் மூலம் 340 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வெஸ்லே பர்ரேஸி, மேக்ஸ் ஓடோவ்ட் இருவரும் பேட்டிங் செய்ய வந்தனர்.
இந்த ஓபனிங் ஜோடி ரன் குவிக்க திணறியது. 11 பந்தில் 5 மட்டுமே எடுத்திருந்தபொது, கிறிஸ் வோக்ஸ் பந்தில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கொலின் அக்கர்மேன் பேட்டிங் செய்ய வந்தார்.
கொலின் அக்கர்மேன் 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டேவிட் வில்லே பந்தில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, சைப்ரண்ட் எங்கெல்பெர்க்ட் பேட்டிங் செய்ய வந்தார்.
தொடக்க ஆட்டக்காரரான வெஸ்லே பர்ரேஸி - சைப்ரண்ட் எங்கெல்பெர்க்ட் ஜோடி பொறுப்பை உணர்ந்து மிகவும் நிதானமாக விளையாடினார்கள்.
நெதர்லாந்து அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன் எடுத்திருந்தபோது, 62 பந்துகளில் 37 ரன் எடுத்து மிகவும் நிதானமாக விளியாடி வந்தபோது, கிறிஸ் வோக்ஸால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். அடுத்து, ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
இங்கிலாந்து அணி 22.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்திருத்தபோது, 49 பந்துகளில் 33 ரன் அடித்திருந்த சைப்ரண்ட் எங்கெல்பெர்க்ட் டேவிட் வில்லே பந்தில், கிறிஸ் வோக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, பாஸ் டி லீட் பேட்டிங் செய்ய வந்தார்.
பாஸ் டி லீட் 10 ரன் மட்டும் எடுத்திருந்த நிலையில், அடில் ரஷித் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து தேஜா நிடமனுரு பேட்டிங் செய்ய வந்தார்.
விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் ஸ்காட் எட்வர்ட்ஸ், தேஜா நிடமனுரு அடித்து ஆடினார்கள். ஆனால், நெதர்லாந்து அணி 33.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்தபோது, ஸ்ட்காட் எட்வர்ட்ஸ் 42 பந்துகளில் 38 ரன் அடித்திருந்த நிலையில், மொயின் அலி பந்தில் டாவிட் மலான் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து பேட்டிங் செய்ய வந்த லோகன் வேன் பீக் 2 ரன்னில் மொயின் அலி பந்தில் டாவிட் மலான் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரோலோஃப் வேன் டெர் மெர்வ் ரன் எதுவும் எடுக்காமல் மொயின் அலி பந்தில் அடில் ரஷித் இடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆர்யன் தத் 1 ரன்னில் அடில் ரஷித் பந்திலும் போல்ட் அவுட் ஆனார். அடுத்து, பால் வேன் மீக்ரென் 4 ரன்னில் மொயின் அலி பந்தில் பட்லர் ஸ்டம்பிக் செய்யப்பட்டு அவுட் ஆனார்.
இதன் மூலம், நெதர்லாந்து அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. தேஜா நிடமனுரு மட்டும் 34 பந்துகளில் 41 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 160 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மொயின் அலி, அடில் ரஷித் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டேவிட் வில்லே 2 விக்கெட்டுகளை விழ்த்தினார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், அடில் ரஷித்.
நெதர்லாந்து: வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்.
ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளுக்கும் இது சம்பிரதாய மோதல் தான். எனவே ஆறுதல் வெற்றியுடன் முடிக்க நினைக்கப்பார்கள். ஆனால், இந்த உலகக் கோப்பையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே 2025-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும்.
அதனால், இந்த ஆட்டம் இரு அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே புள்ளி பட்டியலில் ஏற்றம் கண்டு சாம்பியன்ஸ் கோப்பை தகுதி இலக்கை அடைய இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.