worldcup 2023 | pakistan-vs-england: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறின.
இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 44-வது லீக் முக்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: England vs Pakistan Live Score, World Cup 2023
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் - பாகிஸ்தான் பவுலிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மலான் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த நிலையில், இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் போராடி நீண்ட நீரம் போராடினர். கடைசியாக 13வது ஓவரில் டேவிட் மலான் ஆட்டமிழந்தது மூலம் ஜோடியை உடைத்தனர். 5 பவுண்டரியை விரட்டிய டேவிட் மலான் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவருடன் மறுமுனையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ் அரைசதம் அடித்து 59 ரன்னில் அவுட் ஆனார். இதன்பின்னர் ஜோடி அமைத்த ஜோ ரூட் - பென் ஸ்டோக்ஸ் ஜோடியில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில், ரூட் 60 ரன்களுக்கு அவுட் ஆனார். ஸ்டோக்ஸ் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதிக்கட்டத்தில் ஹாரி புரூக், 17 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30. ரன்களும், டேவிட் வில்லி 5 பந்துகளில் 1 சிக்சர் 2 பவுண்டரியுடன் 15 ரன்களும் எடுத்ததை தொடர்ந்து 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில், ரஃப் 3 விக்கெட்டுகளும், அப்ரிடி, வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அகமது ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 338 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 6.4 ஓவர்களில் இலக்கை எட்டினால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், தொடக்கம் முதலே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 6.4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே எடுத்ததால் உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதனிடையே 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம், சிறப்பாக விளையாடிய நிலையில், 45 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த ரிஸ்வான் - ஷகீல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில், 51 பந்துகளை சந்தித்த ரிஸ்வான் 2 பவுண்டரியுடன் 36 ரன்களும், ஷகீல் 37 பந்துகளில் 4 பவுணடரியுடன் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து இப்திகார் அகமது 3 ரன்களுக்கும், ஷதாப் கான் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் அசத்திய ஷாகீன் அப்ரிடி 23 பந்துகளில் 25 ரன்களும், ஹாரிஸ் ரூஃப் 23 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 35 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதனால் 43.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாசிம் ஜூனியர் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதன மூலம் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பிய நிலையில், இந்த போட்டியில் பெரிய வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேற்றலாம் என்ற கனவுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், அடில் ரஷித்.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், ஃபகார் ஜமான், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷதாப் கான், ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழலில் விளையாட உள்ளது. அதேவேளையில், இதில் வெற்றி பெற்றால் எந்தவித சிக்கலும் இன்றி 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற முடியும் என்பதால் இங்கிலாந்து அணியும் வெற்றிக்காக போராடும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்த ஆட்டம் முடிந்தவுடன் இந்திய அணியுடன் அரையிறுதியில் மோதப்போகும் அணி எதுவென்று தெரியவரும் என்பதால் இது ரசிகர்களின் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.