India vs England, Edgbaston test Tamil News: சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்கொண்ட இங்கிலாந்து அந்த அணியை வாஷ் அவுட் செய்து, தொடரை வசப்படுத்தியது. இது இங்கிலாந்து அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தாலும், இந்த தொடருக்கு முன்னர் வரை, அந்த அணி கடைசியாக விளையாடிய 17 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. தற்போது சில மாத இடைவெளிக்குப்பின், தொடங்கியுள்ள டெஸ்ட் தொடர்களில் தனக்கான இடத்தை மீண்டும் தக்க வைக்க இங்கிலாந்து போராடி வருகிறது.
தற்போது புதிய பயிற்சியாளர், புதிய கேப்டன் என ஒரு உத்வேகம் பொருந்திய அணியாக இங்கிலாந்து உருவெடுத்துள்ளது. அந்த புதிய அணி எப்படி நியூசிலாந்தை சொந்த மண்ணில் வாஷ் அவுட் செய்தது?, இந்த தொடரில் மூலம் இந்திய அணிக்கு கிடைக்கப் பெற்றது என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு முயன்றவரை பதிலளித்துளோம்.

1) ஒரு வருடத்திற்கு முன்பு லார்ட்ஸ் மைதானத்தில், நியூசிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்து, கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 75 ஓவர்களில் 273 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கேப்டன் ஜோ ரூட் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோர் நிர்வகித்த அந்த அணி ஒரு சலிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டிரா செய்தது.
ட்ரென்ட் பிரிட்ஜில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் கடைசி நாளில் இங்கிலாந்தின் நான்காவது இன்னிங்ஸ் இலக்கு 72 ஓவர்களில் 299 ரன்கள். இப்போது அணியை நிர்வகிப்பது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் ப்ரண்டன் மெக்கல்லம்.
இந்த ஆட்டத்தில் ஜானி பேர்ஸ்டோவ்வின் அதிரடியால் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி ருசித்தது. பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
2) ஹெடிங்லியில் நடந்த மூன்றாவது டெஸ்டில், இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் டிரென்ட் போல்ட்டின் ஸ்விங்-பவுலிங்கில் சிக்கி ஆட்டமிழந்து வெளியேறினார். அவரின் வேகப்பந்து வீச்சில் 17/3 மற்றும் பின்னர் 21/4 என சரிந்தனர். இதேபோல், டிம் சவுத்தி ஜோ ரூட்டை ஒரு அற்புதமான பந்தில் காலி செய்தார்.
ஆனால், மிடில் -ஆடரில் களமிறங்கிய பேர்ஸ்டோவ் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை திணறடித்தனர். ஒரு கட்டத்தில் நியூசிலாந்தின் வேகத்தாக்குதலில் சிக்கிய கேப்டன் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
அதன்பிறகு பேர்ஸ்டோவுடன் ஓவர்டன் ஜோடி சேர்ந்தார். மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி வெறும் 274 பந்துகளில் 241 ரன்கள் குவித்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. இந்த ஆட்டம் கிரிக்கெட்டையே உற்சாகப்படுத்தும் விதமாக இருந்தது. பேக்-டு-பேக் சதம் அடித்த பேர்ஸ்டோவ் பேயை ஓட்டும் சாமியார் சவுக்கை சுழற்றுவது போல், பேட்டை சுழற்றியது டெஸ்ட் அரங்கில் பெரும் கவனம் பெற்றது. ஒரு அறிமுக வீரர் அழுத்தத்தின் கீழ் அச்சமின்றி விளையாடியது, அணிக்கு பாசிடிவ் எனர்ஜியை கொடுத்தது.
கடினமான சூழல்
வருகிற வெள்ளிக்கிழமை எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் 5வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா புதிய இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த இங்கிலாந்து அணி ஒரு சேஷனில் உருவாக்கப்பட்டது இல்லை. அதனால் எதிரணியின் தாக்குதலுக்கு பின்வாங்க போவதில்லை. எனவே தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்தியாவுக்கு சவால் விடுக்கும் விதமாகவே போட்டி இருக்கும்.

இந்திய அணியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச சதம் அடிக்கவில்லை, இந்த காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 30 ரன்களுக்கு மேல் இருக்கிறார். ஏறக்குறைய ஐந்தாண்டுகளில் முதல்முறையாக, அவரது சராசரி 50க்குக் கீழே குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, கோலி அனைத்து ஃபார்மெட்டுகளிலும் அணியின் மறுக்கமுடியாத வீரராக இருந்தார். ஆனால் தற்போது அதிலிருந்து நிறைய மாறிவிட்டது.
இங்கிலாந்திலும், ஸ்டோக்ஸ் ஒரு புதிய கேப்டன் இருக்கிறார், ஆனால் அவருக்கு முன்னோடியான ரூட், தனது ரன் குவிப்பு மோஜோவை இழக்கவில்லை. அவர் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆவார். லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் மேட்ச்-வின்னிங் சதம் விளாசினார். அதைத் தொடர்ந்து ட்ரெண்ட் பிரிட்ஜில் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த சதம் அடித்தார். பின்னர் நான்காவது போட்டியில் சேஸிங் செய்த அணிக்கு தனது சிறப்பான ஆட்டத்தால் நங்கூரமிட்டார். ஏனெனில் பேர்ஸ்டோ அவர்களின் சொந்த மைதானத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை அடைவதற்கு மீண்டும் வெறித்தனமாக இருந்தார்.
ஐந்தாவது டெஸ்டில் கோலி வெர்சஸ் ரூட் என முடிவு செய்வது ஆபத்து நிறைந்தது. ஏனென்றால், இருவருக்கும் இடையேயுள்ள ரன்-ஸ்கோரிங் ஸ்ட்ராடோஸ்பியர் என்பது வித்தியாசமானது. 33 வயதான கோலி அதே உத்வேகத்துடன் பயற்சி ஆட்டத்தில் காணப்பட்டர். எனவே, அவர் இந்த ஆட்டத்தை வித்தியமான ஒரு தோணியில் அணுவார். அதேவேளையில், இந்த தொடரின்போது கேப்டனாக அவர் தான் இருந்தார்.
கேப்டன் ரோகித் ஷர்மா கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெஸ்டில் விளையாட முடியாமல் போகலாம். கேப்டன்சி பிரச்சினையை போக்க ஜஸ்பிரித் பும்ரா நிற்க வாய்ப்புள்ளது. இது ஒரு தீவிர பேட்டிங் வெற்றிடத்தை உருவாக்குகிறது. ரோகித் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் இந்தியாவுக்காக அபாரமாக விளையாடி இருந்தார். மேலும் அவர் மோசமான ஐபிஎல்லில் இருந்தபோதிலும், அவர் கோலியுடன் சேர்ந்து அணியின் பேட்டிங் ராயல்டியை மேம்படுத்தினார். இப்போது இந்தியா தனது முதல் தேர்வு தொடக்க வீரர்கள் இருவரையும் இழந்துள்ளது. கே.எல்.ராகுலுக்கு ஷுப்மான் கில் ஒரு சிறந்த மாற்றாக இருக்கிறார். ஆனால் மயங்க் அகர்வால் கவர் ஆக அழைக்கப்பட்டாலும் ரோகித் இல்லாதது மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும்.
இங்கிலாந்தின் சசெக்ஸ் அணிக்காக 8 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் உட்பட 720 ரன்கள் எடுத்ததன் மூலம் சேதேஷ்வர் புஜாரா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால் எட்ஜ்பாஸ்டனில் ஏற்பட்ட தோல்வி அவரை கயிற்றில் நடப்பது போல் உணர செய்யும். மேலும் ரிஷப் பண்ட் எந்த ஆட்டத்தில் களமிறங்குவார் என்பது யாருக்கும் தெரியாது. இந்தியாவின் சொத்தாக இருந்து வரும் அவரால் சரியான மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடிவில்லை.
இங்கிலாந்தில் பந்துவீச்சு இந்தியாவின் பிரச்சினையாக இருந்தததில்லை. பும்ரா உடனான வேகப்புயல்கள் செயல்திறன் மிக்கவர்கள். ஆனால் அணியின் பேட்டிங், குறிப்பாக கோலி ஃபார்மில் இல்லாத மிடில் ஆர்டர், நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. பேட்டிங் தோல்வியால் தென்ஆப்பிரிக்காவில் தொடரை இழந்தது மற்றும் இந்த முறை இங்கிலாந்தில், அவர்களின் சவால் செங்குத்தானது.
உருமாற்றம்

கடந்த ஆண்டு, இங்கிலாந்து தோல்வியுற்றதாகத் தோன்றியது. இது பும்ராவால் சேதப்படுத்தப்பட்ட ஒரு பேட்டிங் வரிசையாகும். மேலும் அவர்கள் ஆஷஸிற்காக இறங்கியபோது, அவர்கள் பாட் கம்மின்ஸின் படையினால் தாக்கப்பட்டனர். ஐபிஎல்லில் இருந்து மெக்கலமுக்கு டெஸ்ட் அணியின் தலைமையை ஒப்படைத்து, அவரை ஐபிஎல்லில் இருந்து வெளியேற்றி, அந்த நாட்டின் ஆண்கள் கிரிக்கெட் அணியின் நிர்வாக இயக்குநரான ராப் கீயின் கீழ் இங்கிலாந்து சாம்பலில் இருந்து எழுந்துள்ளது. ரூட்டிடம் இருந்து ஸ்டோக்ஸ் பொறுப்பேற்றது ஒரு சம்பிரதாயம் மற்றும் அது முன்னாள் கேப்டனை விடுவித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கும். அவர்களின் பந்துவீச்சாளர்கள் வலுவான ஃபார்மில் உள்ளனர். மூன்றாவது டெஸ்டில் கிடைத்த ஓய்வுக்குப் பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சன் புதியதாக இருப்பார். அவர்களின் பேட்ஸ்மேன்கள் தங்கள் புதிய-கண்டுபிடித்த உறுதி மற்றும் முயற்சியில் மகிழ்ச்சியடைந்துள்ளனர், இருப்பினும் ஆல்-அவுட் தாக்குதல் இந்தியர்களுக்கு எதிராக செயல்படுகிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil