scorecardresearch

உலகக் கோப்பை நாயகன்: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு

இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இயன் மோர்கன் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Eoin Morgan announces retirement from all forms of cricket Tamil News
Eoin Morgan, England's World Cup-winning captain, announces retirement

News about retirement, cricket and Eoin Morgan in tamil: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இயன் மோர்கன் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அயர்லாந்து நாட்டில் பிறந்த 36 வயதான மோர்கன், 2006 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் தனது முதல் சர்வதேச போட்டியை அயர்லாந்து அணிக்காக விளையாடினார். அந்த அணியில் 2009 ஏப்ரல் வரை விளையாடினார். பின்னர், அதே ஆண்டின் மே மாதம் முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாட தொடங்கினார். அது முதல் கடந்த ஆண்டு வரையில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடினார்.

இதனிடையே, கடந்த ஆண்டு ஜூனில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், தொழில்முறை சார்ந்த கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தார். இந்த நிலையில், இயன் மோர்கன் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தற்போது அவர் அறிவித்துள்ளார்.

இயன் மோர்கன் 16 டெஸ்ட்களில் விளையாடி 700 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7701 ரன்களும், 115 டி20 போட்டிகளில் விளையாடி 2458 ரன்களும், 83 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2458 ரன்களும் எடுத்துள்ளார். இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை முதன் முதலில் வென்று சாதனை படைத்தது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Eoin morgan announces retirement from all forms of cricket tamil news