இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மிட் ஃபீல்டர் எரிக் டயர், புதன்கிழமை நடந்த FA கோப்பையின் ஐந்தாவது சுற்று போட்டியின் போது, ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நார்விச் சிட்டி அணிக்கெதிரான ஆட்டத்தில், போட்டி 1-1 என முடிவடைந்த பின்னர், திடீரென ரசிகர்களின் கேலரிக்குள் நுழைந்த எரிக், ரசிகர் ஒருவரை நோக்கி ஆவேசமாக முன்னேறினார். பதட்டம் அடைந்த அதிகாரிகள் அவரை தடுக்க முயல, அவர்களையும் மீறி, முன்னேறிச் சென்றார் எரிக்.
பெண்கள் டி20 உலககோப்பை - இந்திய அணி பைனலுக்கு முன்னேற்றம்
வீடியோ பதிவை ஆராய்கையில், சம்பவம் நடந்த இடத்தில், எரிக்கின் சகோதரர் இருந்ததாக நம்பப்படுகிறது. அவரது சகோதரர் குறித்து, ரசிகர்கள் சிலர் தவறாக பேச, அதற்காக கோபப்பட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. மேலும், அந்த வீடியோவில், "அவர் என் சகோதரர்" என்று எரிக் சொல்வதை கேட்க முடிந்தது.
இதுகுறித்து டோட்டன்ஹாம் அணியின் மேலாளர் ஜோஸ் மௌரின்ஹோ கூறுகையில், "தொழில்முறை வீரராக எரிக் செய்தது ஒரு தவறான செயல். ஆனால், யாராக இருந்தாலும், இப்படி தான் நடந்திருப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.
சிஎஸ்கே ஒவ்வொரு தடவையும் பிளே ஆஃப் செல்வது எப்படி? - தோனிக்கு நிகர் தோனி மட்டுமே (வீடியோ)