Advertisment

அதிக எடை, சுறுசுறுப்பு இல்லை… பண்ட் குறித்து முன்னாள் பாக்,. வீரர் சர்ச்சை கருத்து

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய வீரர் ரிஷப் பண்ட்டின் உடற்தகுதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ex-Pakistan captain controversial take on India keeper Rishabh Pant’s fitness Tamil News

Former Pakistan captain Salman Butt made a controversial remark about Rishabh Pant's fitness Tamil News

News about Rishabh Pant, Salman Butt in tamil: வங்கதேசத்தில் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

Advertisment

நேற்று 2 ஆம் நாள் ஆட்ட நேரத்தில் ஆல்-அவுட் ஆனா இந்திய அணி 404 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 150 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 28 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடி இந்திய அணி 61.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்த இந்திய அணி டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் சதம் விளாசிய தொடக்க வீரர் சுப்மான் கில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதேபோல், தனது நீண்ட நாள் சத தாகத்தை தீர்த்துக்கொண்ட புஜாரா 102 ரன்கள் ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார்.

பண்ட் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சர்ச்சை கருத்து

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், ரிஷப் பண்ட்டின் உடற்தகுதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். பண்ட் அதிக எடை கொண்டவராகவும், குறைவான சுறுசுறுப்பு உள்ளவராகவும் இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரை இந்த கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

publive-image

இதுதொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசிய சல்மான் பட், "ரிஷப் பண்ட் தனக்கு விருப்பமான விதத்தில் விளையாடிக்கொண்டிருந்தாலும், ஏதோ புதுமையான முயற்சியில் ஆட முயன்று வெளியேறினார். பந்து ஸ்டம்பில் படும் முன் பேட், பேடில் பட்டதால் இது ஒரு வித்தியாசமான ஆட்டமிழப்பாக இருந்தது.

ரிஷப் பண்ட்டின் உடற்தகுதி குறித்து நான் எப்போதும் பேசுவேன். ஏனென்றால் அவர் எந்த வகையான ஷாட்களை விளையாடுகிறார் மற்றும் புதுமைப்படுத்த முயற்சிக்கிறார். அவர் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் அந்த ஷாட்களை விளையாடுவது அவருக்கு எளிதாக இருக்கும். அவர் அதிக எடையுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். நிச்சயமாக, அவர் அதிக எடையுடன் இருக்கிறார். அதனால் அவர் மிகவும் சுறுசுறுப்பாக இல்லை. உடற்தகுதியைப் பொறுத்தவரை அவர் இருக்க வேண்டிய அளவை விட குறைவாக இருக்கிறார்" என்று அவர் கூறியுள்ளார்.

அரைசதம் விளாச முயன்ற பண்ட் அவுட்

இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டரான பண்ட் வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 46 ரன்கள் எடுத்தார். வங்கதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாமிற்கு எதிராக இந்திய வலது கை பேட்ஸ்மேன்களான கே.எல். ராகுல், சுப்மான் கில் மற்றும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி நல்ல தொடக்கம் கிடைக்கமால் திணறியது.

publive-image

இந்த தருணத்தில் களமாடிய பண்ட் புஜாராவுடன் சிறப்பான பார்ட்னெர்ஷிப்பை அமைத்து ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அவர் அரைசதம் விளாசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஃப்-ஸ்பின்னர் மெஹிடி ஹசன் மிராஸுக்கு எதிராக ஒரு ஷாட்டை முன்கூட்டியே திட்டமிட முயற்சிக்கையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Indian Cricket Pakistan Rishabh Pant India Vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment