ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல முதல் போட்டி. எங்களில் பலர் ஓய்வு பெற்றவர்கள் என்பதால் யாருக்கும் காயம் இல்லை. அவர்களின் அனுபவம் பலனளிக்கிறது. அனைவரும் எங்கள் வீரர்களின் வயது குறித்து பேசுகின்றனர் அதிகமான போட்டிகளில் விளையாடினால் தான் நல்ல அனுபவமே கிடைக்கும். நீங்கள் நிறைய விளையாட்டுகளை விளையாடிய பின்னரே அதைப் பெறுவீர்கள். 300 ஒருநாள் போட்டிகள் விளையாடுவது ஒரு கனவு. இந்தக் காலக்கட்டங்களில் 300 ஒருநாள் போட்டிகளில் ஆடியதே ஒரு சாதனைதான். இந்த மாதிரி போட்டிகளில் விளையாடும் போது இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஒரு நல்ல கலவை தேவை.
களத்திலும், வெளியேயும் இளைஞர்களை வழிநடத்த உங்களுக்கு அனுபவமிக்க வீரர்கள் தேவை. ஐபிஎல்லில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் சீனியர்களுடன் இளம் வீரர்கள் 60-70 நாட்கள் இருக்க முடிகிறது. இது இளைஞர்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பு” என்றவர், முதல் ஆட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்தும் தோனி பேசினார்.
“நாங்கள் போதுமான அளவு பயிற்சி செய்திருந்தாலும், களத்தில் இறங்கி விளையாடுவது என்பது வேறுமாதிரியானது. இந்த பிட்ச் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. ந்து வீச்சாளர்கள் சரியான லெந்த்தை கண்டுபிடிக்க எங்களுக்கு நேரம் பிடித்தது. இந்தப் போட்டி மூலம் நிறைய சாதக அம்சங்கள் கிடைத்தன. ஆனால் இன்னும் நிறைய பகுதிகளில் முன்னேற்றம் தேவை. குறிப்பாக டைமிங். இரண்டாவதாக பேட் செய்யும் போது, பனிப்பொழிவு ஏற்படும் வரை பந்துகள் ஸ்விங் ஆகும் என்பதை அணிகள் அறிந்திருக்கும். இவையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
சில விசயங்கள் பாதகமாகவும் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸின் போது பிட்சில் பனி இருக்கும் என்பது தெரியும். அதனாலே விக்கெட்டை இழக்காமல் இருந்தாலே போதும் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் அணியே வெற்றி பெறும் என்பதை புரிந்து கொண்டேன். இதை மற்ற அணிகள் அறிந்திருக்கும். இவையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள். ராயூடு, டூபிளசி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்” என்றார்.
ரோஹித் பேட்டி!
“சி.எஸ்.கே வீரர்கள் டு பிளெசிஸ் மற்றும் ராயுடு போன்று எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை. முதல் 10 ஓவர்களில் நாங்கள் 85 ஆக இருந்தோம் என்று நினைக்கிறேன். ஆனால் அனைத்து கிரெடிட்டும் சி.எஸ்.கே பௌலர்களுக்கே போய் சேரும். அவர்கள் இறுதியில் நன்றாக பந்து வீசினர். நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். நாங்கள் அவற்றை சரிசெய்து அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக வருவோம் என்று நம்புகிறோம். இது ஆரம்ப கட்டம்தான். இன்னும் நன்றாகத் தொடங்க விரும்புகிறோம். நாங்கள் பிட்சுகளுக்கு ஏற்ப மாற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“