எக்ஸ்பிரஸ் அட்டா: செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், அருணா, அர்ஜுன் எரிகைசி நேர்காணல் வீடியோ

தி இந்தியன் எஸ்பிரஸின் 'எக்ஸ்பிரஸ் அட்டா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஸ்வநாதன் ஆனந்த் கலந்துரையாட உள்ளார். அவருடன் அவரது மனைவி அருணா மற்றும் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி ஆகியோரும் இணைவார்கள்.

தி இந்தியன் எஸ்பிரஸின் 'எக்ஸ்பிரஸ் அட்டா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஸ்வநாதன் ஆனந்த் கலந்துரையாட உள்ளார். அவருடன் அவரது மனைவி அருணா மற்றும் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி ஆகியோரும் இணைவார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update

உலக செஸ் அரங்கில் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான அவர் கடந்த 40 ஆண்டுகளில் 5 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று அசத்தி இருக்கிறார். இன்னும் ஏராளமான பட்டங்களையும், பதக்கங்களையும் வென்றுள்ள இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். 

Advertisment

தற்போது அவரது அடிச்சுவட்டில் இளம் கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விடிட் குஜராத்தி உள்ளிட்டோர் பயணித்து வருகிறார்கள். அவர்களை 'வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமி' எனும் தனது சொந்த செஸ் அகாடமியில் வைத்து பட்டை தீட்டி வருகிறார். அவரது பட்டறையில் பயிற்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த டி. குகேஷ் இந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் டைட்டில் மோதலில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.

இந்த நிலையில், தி இந்தியன் எஸ்பிரஸின் 'எக்ஸ்பிரஸ் அட்டா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஸ்வநாதன் ஆனந்த் கலந்துரையாட உள்ளார். அவருடன் அவரது மனைவி அருணா மற்றும் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி ஆகியோரும் இணைவார்கள். இந்த நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (ஜூன் 16) மாலை 7 மணிக்கு சென்னையில் தொடங்க உள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கோயங்கா மற்றும் உதவி ஆசிரியர் அமித் காமத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுடன் உரையாடுவார்கள்.

'எக்ஸ்பிரஸ் அட்டா' நிகழ்ச்சி என்பது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கிரிக்கெட் ஐகான்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் ஊக்கமூட்டும் வியூக நிபுணர் கவுர் கோபால் தாஸ் விருந்தினர்களாக பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chess Viswanathan Anand

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: