/indian-express-tamil/media/media_files/xbm27Rmtot5AwrZWn1y6.jpg)
வைரல் வீடியோவில் ஐடன் மார்க்கரமை முத்தமிடுபவர் அவரது மனைவி நிக்கோல் மார்க்ரம் என்பது உறுதியாகியுள்ளது.
”கலாநிதிமாறன் மகள் காவ்யா மாறன். கர்மா என்பது யாதெனில் அன்னைக்கு நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் நடக்காத ஒன்றை சன் தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டினான் இன்று அவனது மகளின் கேவலமான வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. இதுக்கும் தி.மு.க கொத்தடிமை நாய்கள் வெட்கமில்லாமல் முட்டு கொடுப்பானுக பாருங்க.” என்று குறிப்பிடப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (Newschecker.in ) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த வீடியோவில், கிரிக்கெட் வீரர் ஐடன் மார்க்ரமை முத்தமிடுபவர் அவரது மனைவி நிக்கோல் மார்க்ரம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஐடன் மார்க்ரம் மனைவி நிக்கோல் மார்க்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். எஸ்.ஏ-20ல் கோப்பை வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்பின் வெற்றிக்கு தனது கணவரைப் பாராட்டி அவர் வெளியிட்ட அந்த வீடியோவில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள முத்தமிடும் காட்சியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
மேலும், அவர் பதிவிட்டுள்ள மற்றொரு புகைப்படத்தில் நிக்கோல் அணிந்திருக்கும் ஆடை, கடிகாரம் உள்ளிட்டவையும், ஐடனின் கண்ணாடி உள்ளிட்டவைகளும் வைரல் வீடியோவுடன் ஒத்துப்போகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது. வைரல் வீடியோவில் ஐடன் மார்க்கரமை முத்தமிடுபவர் அவரது மனைவி நிக்கோல் மார்க்ரம் என்பதும், குறிப்பிட்ட நிகழ்வின் வீடியோவே கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் என்று வைரலாகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கலாநிதி மாறன் மகளும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி உரிமையாளருமான காவ்யா மாறன் (Kavya Maran), தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ போலியானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனால், இந்தத் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (Newschecker.in ) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.