CSA T20 League Tamil News: இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போல் தென்ஆப்பிரிக்காவிலும் தென்ஆப்பிரிக்க டி-20 கிரிக்கெட் தொடர் என்ற ஒரு புதிய டி-20 லீக் அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த தொடரையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
அவ்வகையில், ஜோகன்னஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆணியும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணியை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சொந்தமாக்கியுள்ளன.
முக்கிய வீரர்களை இழுத்துப்போட்ட மும்பை
இந்தத் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த 5 வீரர்களில் மூன்று வெளிநாட்டு வீரர்கள், ஒரு தென்னாப்பிரிக்கர் மற்றும் ஒருவர் ஏலத்திற்கு முன் வளர்ச்சியடைந்த வீரர்களின் பட்டியலில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன்படி, தொடரில் களமாடும் 6 அணிகளும் முந்தியடித்துக்கொண்டு வீரர்களை வசப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வகிக்கும் எம்ஐ கேப் டவுன் அணி தாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, காகிசோ ரபாடா, சாம் குர்ரான், லியாம் லிவிங்ஸ்டோன், ரஷித் கான் மற்றும் டெவால்ட் ப்ரூவிஸ் ஆகியோர் அந்த அணியில் இடம்பிடித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் குயின்டன் டி காக் ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமத்திற்கு சொந்தமான டர்பனை தளமாகக் கொண்ட அணிக்காக விளையாடுகிறார். அதே சமயம் போர்ட் எலிசபெத் உரிமையை வாங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஐடன் மார்க்ரமை உள்ளூர் வீரராகக் களமிறக்கவுள்ளது. டேவிட் மில்லர் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சொந்தமான பார்ல் உரிமையுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
டூ பிளசிஸ், மொயீன் அலியை வசப்டுத்திய சி.எஸ்.கே…
தென்ஆப்பிரிக்க டி-20 கிரிக்கெட் லீக் தொடரில், ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணிக்கு ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என பெயர் வைக்க சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையில், அந்த அணி அதன் 5 வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனது சிறப்பான பங்களிப்பை வழங்கிய நட்சத்திர வீரர் ஃபாப் டூ பிளசிஸை முதல் வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். அவரே அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இதேபோல் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி, மற்றொரு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான ஆல்ரவுண்டர் வீரர் மொயீன் அலியை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இரண்டு வீரர்களைத் தவிர, அணியில் கரீபியன் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆல்ரவுண்டரும், இலங்கையைச் சேர்ந்த ஒரு சுழற்பந்து வீச்சாளரும் இடம் பெறுவார்கள்.
சர்வதேச டி20 லீக் (ILT20 - ஐஎல்டி20) க்கு ஒப்பந்தம் செய்த மொயீன் அலி, தென்ஆப்பிரிக்க டி-20 -யிலும் (சிஎஸ்ஏ) சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளார். அதாவது இரண்டு லீக்குகளின் அட்டவணையும் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலையில் இருக்கிறது.
சர்வதேச டி20 லீக் இதுவரை லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்திருந்தாலும், ஆறு உரிமையாளர்கள் தங்கள் புதிய ஒப்பந்தங்களை இன்னும் வெளியிடவில்லை. வீரர்கள் சிஎஸ்ஏ அல்லது ஐஎல்டி20 விளையாடுவார்களா என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. ஆனால் லியாம் லிவிங்ஸ்டோன், ரஷித் கான், ஜோஸ் பட்லர் போன்ற சில முன்னணி வீரர்கள் ஏற்கனவே சிஎஸ்ஏவின் டி20 லீக்கில் விளையாட உறுதிபூண்டுள்ளனர். ஒப்பந்த விலை ஐபிஎல்லுக்குப் பிறகு அதிகபட்சமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.