ரஷ்யாவில் நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன், தென் கொரியாவைச் சேர்ந்த இசைக் குழுவான BTS இந்தாண்டு வெளியிட்ட, Love Yourself: Tear எனும் ஆல்பத்தில் இடம் பெற்றிருந்த ‘Fake Love’ எனும் பாடல் இசைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குழுமியிருந்த ஸ்டேடியத்தில், இப்பாடல் ஒலிக்கப்பட்ட போது, ரசிகர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடியதால், அரங்கமே அதிர்ந்தது. சிறிய நில நடுக்கமே வந்தது போல உணர்ந்ததாக, போட்டியை நேரில் ரசித்தவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஹிட்டாகியிருந்த இப்பாடல், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இசைக்கப்பட்டதால், தற்போது இந்தியாவிலும் ஹிட் அடித்துள்ளது.
Congratulations ARMY you did it. #fakelove was played at #fifa #WorldCup #FIFAFakeLove ❤ pic.twitter.com/Z4TWOOPuBw
— 전 (@jeon506) July 7, 2018