worldcup 2023 | pakistan-vs-south-africa: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடக்கும் 26வது போட்டியில் பாகிஸ்தான் - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்ரிக்கா 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். மறுபுறம், 5ல் 2 போட்டிகளில் மட்டுமே வென்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. அந்த அணி மீதமுள்ள 4 போட்டிகளிலும் அவசியம் வெற்றி பெற வேண்டும். ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட வாய்ப்பு குறைந்துவிடும்.
போராட்டம்
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பு தொடரில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி சிறப்பாக தொடரை தொடங்கியது. ஆனால், இந்தியாவிடம் வாங்கிய அடிக்குப் பிறகு, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த தோல்விகளில் இருந்து மீள்வது அந்த அணி பெரிய போராட்டமாக உள்ளது.
ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்ததை அடுத்து கேப்டன் பாபர் அசாம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அவரை கேப்டன் பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். இதக்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தொழில்நுட்பக் குழுவின் தலைவரான மிஸ்பா-உல்-ஹக், உலகக் கோப்பை அணியில் சில மாற்றங்களை பரிந்துரைத்ததாகவும், ஆனால் பாபர் அவற்றை ஏற்க மறுத்துவிட்டதாகவும் விமர்சகர்கள் அணியில் பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
Pakistan U19 and Sri Lanka U19 train ahead of the third one-day in Karachi 🏟️
— Pakistan Cricket (@TheRealPCB) October 26, 2023
The five-match series is currently squared at 1-1 🏏#PAKvSL | #PakistanFutureStars pic.twitter.com/1siggmHpUY
மாற்றம்
இந்த நிலையில், நாளை தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியில் சில வீரர்கள் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகள் மோதும் சென்னை ஆடுகளம் மெதுவான மற்றும் தாழ்வான ஆடுகளம் என்பதால் 2 வீரர்களை நிச்சயம் பாகிஸ்தான் மாற்றும் வாய்ப்பு உள்ளது.
ஷதாப் இடத்தில் நவாஸ்
பாகிஸ்தானின் லெக் ஸ்பின் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷதாப் கான், பந்துவீச்சு ஃபார்மில் மோசமாக உள்ளார். அவருக்குப் பதிலாக காய்ச்சலால் கடந்த போட்டியில் தவறவிட்ட முகமது நவாஸ் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஷதாப் பந்தை அரிதாகவே ஸ்பின் செய்கிறார். அவர் டி20 பந்து வீச்சாளர் என்பதால் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுக்க போராடுகிறார்.
இமாமுக்கு பதில் ஃபகார்
ஃபகார் ஜமானின் காயம் பாகிஸ்தான் அணிக்கு மேலும் கவலை அளிக்கிறது. இல்லையெனில், அவர் ஆடும் லெவன் அணியில் ஃபார்மில் இல்லாத இமாம்-உல்-ஹக் பதில் விளையாடி இருப்பார். அவருக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் தற்போது குணமாகியுள்ள நிலையில், அவர் சென்னையில் நேற்று நடந்த வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அவரது தேர்வு குறித்த நாளை காலையில் இறுதி முடிவு எடுக்கப்படலாம். ஃபக்கருக்கு உடல் தகுதி இல்லை என்றால் அவருக்குப் பதிலாக அப்ரார் அகமது சேர்க்கப்படலாம் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.